புனேவில் உள்ள ARAI அமைப்பு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட சில மாடல்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கிராஷ் டெஸ்ட் முடிவுகளை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.
ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI- Automotive Research Association of India) அமைப்பு இந்தியாவின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் (MHI) கீழ் செயல்படுகின்றது.
குறிப்பாக எலக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் சோதனைக்கு உட்படுத்ததுவதற்கான முக்கிய காரணமே விபத்தின் பொழுது வாகனங்கள் தீப்பிடிக்கின்றதா என்பது குறித்து அறிந்து கொள்ள சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம்.
சோதனை செய்யப்பட்டுள்ள வாகனங்கள் குறித்தான விபரத்தை தெரிவிக்கையில், தற்பொழுதுள்ள அளவுகோல்களுக்கு எதிராக சோதனைகள் நடத்தப்பட்டன, ஆக்சிலேரோமீட்டர் மற்றும் அதிவேக கேமராக்களைப் பயன்படுத்தி விரிவான கிராஷ் டெஸ்ட் தரவைப் பதிவுசெய்துள்ளது. சோதனைகளில் ஒரு நிலையான தடுப்பு மற்றும் பக்க வாட்டில் உள்ள போல்களில் மீது மோதப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்களுடன் மேற்கொள்ளபட்டுள்ள ரகசிய ஒப்பந்தங்களை மேற்கோள் காட்டி, ARAI ஆனது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சோதனைகளை கோரிய நிறுவனங்களின் விபரங்களை வெளியிட மறுத்துவிட்டது. இந்தியாவில் வளர்ந்து வரும் மின்சார இரு சக்கர வாகனப் பிரிவுக்கான பாதுகாப்புத் தரங்களை நிறுவுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியை இந்த செயல்முறை குறிக்கிறது.
இந்த கிராஷ் டெஸ்ட் பொதுவாக அனைத்து எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு சோதனை செய்யப்படுவதற்கா துவக்க கட்ட முயற்சியாக இருக்கலாம். ஆனால் எப்பொழுது நடைமுறைக்கு வரும் என்ற எவ்விதமான உறுதியான தகவலும் தற்பொழுது இல்லை.