தோனி முதல் விராட் கோலி வரை! அதிக சொத்து மதிப்பு கொண்ட வீரர்களின் முழு விவரம்!

ஆசியாவில் இந்தியா கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது ஆசியாவையும் தாண்டி பல வெற்றிகளை பெற்று வருகிறது.  தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டாக கிரிக்கெட் மாறி வருகிறது. கிரிக்கெட் வீரர்களுக்கும் தற்போது அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.  ஒருநாள் உலகக் கோப்பை போன்ற முக்கிய போட்டிகள் உலகளவில் பில்லியன் கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளது. டிக்கெட் விற்பனை, ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் நல்ல வருவாயும் வருகிறது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உலகளவில் இரண்டாவது பணக்கார விளையாட்டு லீக்காக உள்ளது. இது கிரிக்கெட் மீதான ரசிகர்களின் அன்பை பிரதிபலிக்கிறது. இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் கோடி கணக்கில் சம்பளம் பெறுகின்றனர். அதிக சொத்து மதிப்பு கொண்ட வீரர்களை பற்றி பார்ப்போம்.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டில் சிறந்த வீரராக இருந்து வருகிறார். எல்லா காலத்திலும் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று புகழப்படுகிறார். அனைத்து வடிவங்களிலும் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை வைத்துள்ளார். 100 சர்வதேச சதங்கள் அடித்த ஒரே வீரர் சச்சின் தான். இப்படி பல சாதனைகளை வைத்துள்ள சச்சின், சொத்து மதிப்பிலும் அதிக சாதனை வைத்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 1435 கோடி என்று கூறப்படுகிறது.

மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக உள்ளார். இதுவரை 3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை வைத்துள்ளார். 2007 டி20 உலக கோப்பை, ஐசிசி 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய முக்கிய ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார். தோனியின் அமைதியான தலைமைத்துவமும், விக்கெட் கீப்பிங் திறமையும் அவருக்கு மரியாதையை பெற்றுத்தந்துள்ளது. அவரது சொத்து மதிப்பு ரூ. 1060 கோடி என்று கூறப்படுகிறது.

விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். சேஸ் மாஸ்டர் என்று அன்போடு அழைக்கப்படும் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 8000, 9000, 10000, 11000 ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 1018 கோடி என்று கூறப்படுகிறது.

வீரேந்திர சேவாக்

இந்திய அணியின் தலை சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் வீரேந்திர சேவாக்கும் ஒருவர். அதிவேகமாக ரன்களை அடிப்பதில் தலைசிறந்தவர் சேவாக். டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த பார்மெடாக இருந்தாலும் அதிரடியாக விளையாட கூடியவர் சேவாக். ஹீரோ ஹோண்டா, ரீபோக், சாம்சங் மற்றும் அடிடாஸ் உள்ளிட்ட பல பிராண்டுகளுக்கு அம்பாசிடராக உள்ளார் சேவாக். அவரது சொத்து மதிப்பு ரூ. 350 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ஆல்-ரவுண்டர் திறன்களுக்காக புகழ்பெற்றவர். டி20 உலக கோப்பையில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த அவர் தற்போது கமெண்ட்ரி செய்து வருகிறார். அவரது சொத்து மதிப்பு ரூ. 333 கோடி என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.