திருச்செந்தூர் இன்று ஒரே நாளில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன. தினந்தோறும்ம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக முகூர்த்த நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதோடு, கோவில் வளாகத்தில் திருமண நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இன்றைய தினம் சுபமுகூர்த்த நாள் என்பதால், திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் இன்று அதிகாலை முதல் சுமார் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. […]