6 மாத Call History உங்களுக்கு வேண்டுமா? இதோ ஈஸியான வழிமுறை

மொபைல் இல்லாதவர்கள் இல்லை என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது. ஏனென்றால், மனிதர்களின் வாழ்க்கையை பெருமளவு எளிமையாக மாற்றுவதில் முக்கிய பங்கு இப்போது மொபைலுக்கு தான் உண்டு. ஒருவரை தொடர்பு கொள்வது முதல் இணையத்திலேயே நேரடியாக சந்தித்துக்கொள்ள வழிவகை செய்வது வரை என யாரையும் எந்நேரத்திலும் மொபைல் மூலம் தொடர்பு கொண்டுவிட முடியும். ஆனால், நீங்கள் யார் யாரையெல்லாம் தொடர்பு கொண்டீர்கள் என்ற விவரம் உங்களுக்கு தெரிய வேண்டும் என விரும்புகிறீர்களா?. இப்போதைய சூழலில் ஒரு மாதத்துக்கான கால்ஹிஸ்டிரியை ஈஸியாக எடுத்துவிட முடியும். ஆனால், 6 மாத காலஹிஸ்டிரியை எப்படி தெரிந்து கொள்வது?.

இதற்கு சற்று மெனக்கெட வேண்டியிருக்கும். அதாவது, வணிக நோக்கங்களுக்காகவோ, தனிப்பட்ட குறிப்புக்காகவோ அல்லது முக்கியமான தொடர்புகளைக் கண்காணிப்பதற்காகவோ, கடந்த ஆறு மாதங்களாக உங்கள் அழைப்பு வரலாற்றை பார்க்க விரும்புகிறீர்கள் என்றால் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் இதற்கான வழிமுறைகளை வழங்குகின்றன. முதலில் ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து கடந்த 6 மாதத்துக்கான கால் ஹிஸ்டிரியை எப்படி பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஏர்டெல் எண்ணில் கால் ஹிஸ்டிரியை எடுப்பது எப்படி?

ஏர்டெல் யூசர்கள் இரண்டு முறைகளில் கடந்த 6 மாதங்களுக்கான கால் ஹிஸ்டிரியை எடுத்துக் கொள்ளலாம்.

எஸ்எம்எஸ் மூலம் பெற : 

ஏர்டெல் மொபைல் யூசர்கள் மெசேஜ் வழியாக “EPREBILL” என டைப் செய்து 121 க்கு அனுப்ப வேண்டும். அதில் கால் ஹிஸ்டிரி தேவையான கால அளவை நீங்கள் குறிப்பிட வேண்டும். அதில் இமெயில் ஐடியையும் மெசேஜ் செய்ய வேண்டும். உங்கள் மொபைலில் இருந்து இந்த மெசேஜ் அனுப்ப வேண்டும்.

ஏர்டெல் வெப்சைட் மூலம் பெற  : 

மற்றொரு வழியில் என்னவென்றால், ஏர்டெல் வாடிக்கையாளர் சேவையிலிருந்து உங்கள் அழைப்புப் பதிவுகளின் நகலைக் (Copy) கோரலாம். ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது ஏர்டெல் கடைக்கு நேரில் செல்வதன் மூலமோ இதைச் செய்யலாம். RELATED CHARGES இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் கணக்கு சரிபார்ப்புக்கு நீங்கள் அடையாளத்தை வழங்க வேண்டியிருக்கலாம்.

– ஏர்டெல் இணையதளத்திற்குச் சென்று உங்கள் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி உங்கள் கணக்கில் லாகின் செய்யவும்.
-‘Application Details’பகுதிக்குச் செல்லவும்.
-‘Application Details’என்பதன் கீழ், குறிப்பிட்ட காலத்திற்கான அழைப்புப் பதிவுகளைப் பார்ப்பதற்கான ஆப்சனை பார்க்கலாம்.
– எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை வேண்டும் என்ற வரம்பைத் தேர்ந்தெடுத்து, ‘Submit’ என்பதைக் கிளிக் செய்யவும்.
– உங்கள் கால் ஹிஸ்டிரியை திரையில் காட்டப்படும்.

ஜியோ எண்களில் Call History சரிபார்ப்பது எப்படி?

– முதலில், MyJio செயலியை இன்ஸ்டால் செய்யவும்
– லாகின் செய்து உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்
– செயலியின் மேல் இடது மூலையில் உள்ள மூன்று கிடைமட்ட கோடுகளைக் கிளிக் செய்யவும்.
– My Statement பகுதிக்கு செல்லவும்
– உங்களுக்கு தேவையான தேதிகளை உள்ளிட வேண்டும்
– நீங்கள் அழைப்பு பதிவுகளைப் பார்க்க விரும்பும் குறிப்பிட்ட தேதிகளை உள்ளிடவும்.
– ’See’ என்பதை கிளிக் செய்யவும், இப்போது Call records உங்களுக்கு முன்னால் இருக்கும்.
 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.