ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரயிஸி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோர் நேற்று (19) இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் பலியானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் நாட்டு ஊடகங்கள் மற்றும் அந்நாட்டின் செய்தி நிறுவனம் என்பனவற்றின் தகவல்கள் அந்த ஹெலிகொப்டரில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளதாக அறிவித்துள்ளன.
விபத்திற்குள்ளான ஹெலிகொப்டரில் அஸர்பைஜானிலிருந்து மீண்டும் திரும்பி வந்துகொண்டிருந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரயிஸி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர்அப்துல்லாஹியான், ஈரானின் கிழக்கு ஆஜர்பைஜான் மாகாண ஆளுனர் மாலிக்ரஹ்மதி, உட்பட 9 நபர்கள் பயணிருந்ததாகவும் ஈரான் நாட்டு மற்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.