ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிஸி பயணித்த ஹெலிகொப்டர் வடமேல் அஸர்பைஜான் பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அஸர்பைஜான் பிராந்திய நாட்டின் ஜனாதிபதி இல்ஹாம் அலியெவுடன் நீர்ப்பாசனத் திட்டமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு மீண்டும் நாடு திரும்பும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஈரான் ஜனநாயக நாட்டின் செய்தி நிறுவனம் தொடர்ந்தும் தெரிவித்துள்ளது.
ஹெலிகொப்டர் விபத்தில் பயணிகள் அனைவரும் இறையடி சேர்ந்துவிட்டனர் என்ற ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது.
கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான், ஈரான் வெளிவிவகார அமைச்சர், கலாநிதி மாலிக் ரஹ்மதி, ஈரானின் கிழக்கு ஆஜர்பைஜான் மாகாண ஆளுனர், ஆயதுல்லாஹ் செய்யித் முஹம்மத் ஆலஹஷிம், ஈரானின் கிழக்கு ஆஜர்பைஜான் மாகாணத்திற்கான இமாம் காமெயினியின் பிரதிநிதி மற்றும் தலைமை ஜும்ஆ இமாம், தளபதி மஹ்தி மூஸவி ஆகியோர் ஈரான் ஜனாதிபதி ஆயதுல்லாஹ் செய்யித் இப்றாஹீம் ரயீஸியுடன் குறித்த ஹெலிகொப்டரில் பயணித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடகங்கள் உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.
ஹெலிகொப்டர் புறப்பட்டு அரைமணி நேரத்தினுள் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அவ்விபத்தில் ஈரான் ஜனாதிபதி ரயிஸி உயிரிழந்துள்ளதாக ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இவ்விபத்தின் பின்னர் ஹெலிகொப்டரில் பயணித்த சகலரின் கையடக்கத் தொலைபேசிகளும் ஹெலிகொப்டரின் ரேடியோ செய்தித் தொடர்பாடல்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.