வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் வெசாக் தினத்திலும் (23ஆம் திகதி) வெசாக் தினத்திற்கு மறுநாளிலும் (24ஆம் திகதி) மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் மே மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில், நாடளாவிய ரீதியில் உள்ள, சில்லறை விற்பனை செய்ய அனுமதி பெற்ற அனத்து மதுபானம் விற்பனை நிலையங்களும் மூடப்பட உள்ளன.
இம்முறை 2024ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் பண்டிகை மாத்தளை மாவட்டத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ளதுடன், மாத்தளை நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து மதுபானக் கடைகளையும் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.