இந்தியாவின் அதிகப்படியான மைலேஜ் வழங்கும் சிஎன்ஜி பைக் மாடலை புரூஸர் (Bajaj Bruzer Cng) என்ற பெயரில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஜூன் 18 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில், இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் மாடலின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மாடல் ஆனது பஜாஜ் CT125X பைக்கின் தோற்ற உந்துதலை பின்பற்றி அதே நேரத்தில் மாறுபட்டதாகவும் அமைந்திருக்கின்றது.
மிக நீளமான இருக்கையுடன் அமைந்துள்ள மாடலின் டியூப்ளர் ஸ்டீல் கார்டிள் பிரேம் மத்தியில் டேங்க் ஆனது கொடுக்கப்பட்டு சிஎன்ஜி எரிபொருள் நிரப்பும் வகையிலான அமைப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த மாடலுக்கு சாய்தளமாக என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
ஆஃப் ரோடு சாலைகளிலும் பயணிக்கும் வகையிலான டயர் வழங்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ள பஜாஜின் புரூஸரில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்றிருப்பதனால் 125சிசிக்கு குறைந்த திறன் பெற்ற என்ஜினாக இருக்கலாம்.
நடப்பு ஆண்டில் இரண்டு சிஎன்ஜி பைக்குகளையும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5 முதல் 6 சிஎன்ஜி பைக்குகள் விற்பனைக்கு கிடைக்கும். முன்பாக இந்நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் பஜாஜ் கூறுகையில் தற்பொழுது பெட்ரோல் என்ஜின் பெற்ற மாடல்களில் அதிக மைலேஜ் வழங்குகின்ற மோட்டார்சைக்கிளை விட 50-60 % கூடுதல் மைலேஜ் வெளிப்படுத்தலாம் என தெரிவித்திருந்தார்.