சில மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் எம்பிவி காரின் டாப் வேரியண்டுகளான ZX மற்றும் ZX (O) முன்பதிவு மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான தொடர் முன்பதிவின் காரணமாக தற்பொழுது 12 முதல் 15 மாதங்கள் வரை டெலிவரி பெற காத்திருக்க வேண்டிய நிலையில் தொடர்ந்து முன்பதிவினை பெறாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஹைக்ராஸ் மாடலுக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு உள்ள நிலையில் தொடர்ந்து 173hp மற்றும் 209Nm வெளிப்படுத்தும் 2.0-லிட்டர், நான்கு-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0-லிட்டர், நான்கு-சிலிண்டர் ஹைப்ரிட் எஞ்சின் 184hp பவரை வெளிப்படுத்துகின்றது.
தற்பொழுது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ரூ.25.97 லட்சம் முதல் ரூ.30.98 லட்சம் வரை கிடைக்கின்றது. ஹைபிரிட் அல்லாத வகைகளின் விலை தொடர்ந்து ரூ.19.77-21.33 லட்சத்தில் உள்ளது.
ரூ.21 லட்சத்தில் குறைந்த விலை ஹைக்ராஸ் காரில் ஹைபிரிட் அல்லாத வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.