ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயந்த் சின்ஹா. முன்னாள் மத்திய அமைச்சரான ஜெயந்த் சின்ஹா, தற்போது ஹஜரிபாக் தொகுதி பா.ஜ.க எம்.பியாக இருக்கிறார். தற்போது நடக்கும் தேர்தலில் சின்ஹா-வுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மகனான ஜெயந்த் சின்ஹா கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட சோசியல் மீடியா பதிவில் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கும்படி பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டாவிடம் கேட்டு இருந்தார். இதையடுத்து ஜெயந்த் சின்ஹா போட்டியிட்ட தொகுதிக்கு மனீஷ் ஜெய்ஸ்வால் என்பவரை பா.ஜ.க வேட்பாளராக அறிவித்தது. அதன் பிறகு கட்சி பணிகள் அல்லது தேர்தல் பணிகள் எதிலும் சின்ஹா ஈடுபடவில்லை.
அதோடு சின்ஹா நேற்று முன் தினம் நட்ந்த தேர்தலில் வாக்களிக்க கூட செல்லவில்லை. இதனால் பா.ஜ.க மாநில செயலாளர் ஆதித்ய சாஹு கட்சி பணியாற்றாத ஜெயந்த் சின்ஹாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். சாஹு அனுப்பி இருக்கும் நோட்டீசில், “கட்சிப்பணி மற்றும் பிரசாரத்தில் பங்கேற்கவில்லை. தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. உங்களது செயலால் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாளில் இதற்கு விளக்கம் கொடுக்கவேண்டும்” என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் குறித்து ஜெயந்த் சின்ஹா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீரும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தனக்கு விளக்கு அளிக்க வேண்டும் என்றும், கிரிக்கெடில் கவனம் செலுத்தப்போவதாக குறிப்பிட்டு இருந்தார். கெளதம் கம்பீர் டெல்லியில் எம்.பி.யாக இருக்கிறார். அவர் வெற்றி பெற்ற தொகுதியில் ஹர்ஷ் மல்ஹோத்ரா என்பவரை வேட்பாளராக பா.ஜ.க அறிவித்து இருக்கிறது. பா.ஜ.க நடத்திய சர்வேயில் மேற்கண்ட இருவருக்கும் வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரிய வந்தது. எனவே அவர்களுக்கு பதில் பா.ஜ.க வேறு வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டு இருந்தது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88