டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு பெரும் அடி, கேப்டன் ஜோஸ் பட்லர் காயம்..

ENG vs PAK T20 Match: டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே டி20 தொடர் நடைபெறவுள்ளது. ஆனால் இந்த தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் ஏற்பட்டுள்ளது. ஊடக செய்திகளின்படி, ஜோஸ் பட்லர் இங்கிலாந்து-பாகிஸ்தான் தொடரில் இருந்து வெளியேற வேண்டியிருக்கும். ஆனால் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதற்குள் ஜோஸ் பட்லர் உடல்தகுதியுடன் இருப்பாரா என்பதுதான் இங்கிலாந்து ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. 

டி20 உலகக் கோப்பை கருத்தில் கொண்டு இங்கிலாந்து திரும்பிய ஜோஸ் பட்லர்

டி20 உலகக் கோப்பைக்கு ஜோஸ் பட்லர் இல்லை என்றால் அது இங்கிலாந்து அணிக்கு பெரும் அடியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் ஐபிஎல் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னதாக நாடு திரும்பினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஜோஸ் பட்லர் விளையாடுவதில் சந்தேகம்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி மே 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் ஜோஸ் பட்லர் விளையாட முடியாது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இங்கிலாந்து-பாகிஸ்தான் தொடரில் ஜோஸ் பட்லர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு எனவும் கூறப்படுகிறது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லருக்கு காயம்

இருப்பினும், ஜோஸ் பட்லரின் காயம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சமீபத்தில் ஐபிஎல் 2024 தொடரில் விளையாடி வந்த ஜோஸ் பட்லர், டி20 உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு தனது நாட்டிற்கு திரும்பினார். 

ஜோஸ் பட்லரால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பின்னடைவு

ஜோஸ் பட்லர் பிளேஆஃப் சுற்றுக்கு முன்பாக இங்கிலாந்து திரும்பியது சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த ஜாம்பவான் பேட்ஸ்மேனின் காயம் குறித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து-பாகிஸ்தான் டி20 தொடரின் அட்டவணை

டி20 உலகக் கோப்பைக்கு முன், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி மே 22ம் தேதி ஹெடிங்லியில் நடக்கிறது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் மே 25 ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் இரண்டாவது டி20 போட்டியில் மோதுகின்றன. இந்த தொடரின் மூன்றாவது டி20 மே 28 ஆம் தேதி கார்டிப்பில் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதும் கடைசி டி20 போட்டி லண்டனில் மே 30 ஆம் தேதி நடக்கிறது. 

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பாரா ஜோஸ் பட்லர்

அதன் பிறகு டி20 உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து அணி அமெரிக்கா செல்கிறது. ஆனால் அதற்கு முன் ஜோஸ் பட்லரின் காயம் இங்கிலாந்தின் சிக்கலை அதிகரிக்கப் போகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.