மட்டக்களப்பு மாவட்டத்தின் பனிச்சையடியில் மக்கள் பாவனைக்காக வீதி திறந்து வைப்பு

அத்தியாவசிய மணல் வீதிகளை கிறவல் வீதிகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் பனிச்சையடியில் – கொக்குவில் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள படித்த பெண்கள் பண்ணை வீதி நேற்று (20)  மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

 

5.2 மில்லயன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கிறவல் வீதியை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டு குறித்த வீதியை திறந்து வைத்தார்.
 
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  மாவட்ட செயலக உயரதிகாரிகள் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக உயரதிகாரிகள், கிராமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
 
கடந்த வருடம் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் ஊடாக 500 மில்லியன் செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மணல் வீதிகளை கிறவல் வீதிகளாக மாற்றியிருந்த நிலையில், இவ்வாண்டும் மணல் வீதிகளை கிறவல் வீதிகளாக மாற்றியமைப்பதன் முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபாயினை இராஜாங்க அமைசர் சி. சந்திரகாந்தன் தமது அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.