புனே: மகாராஷ்டிரா மாநிலம் உஜ்ஜைனி அணையில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் மாயமாகினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கலாசி கிராமத்தில் உஜ்ஜைனி அணையில் இந்த விபத்து நடந்தது. நிகழ்விடத்தில் என்டிஆர்எஃப் மற்றும் எஸ்டிஆர்எஃப் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அணையில் சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்றுடன் பெய்த திடீர் மலை காரணமாக படகு கவிழ்ந்ததாக அந்தப் படகில் பயணித்த சோலாபூர் துணை ஆய்வாளர் ராகுல் டோங்ரே தெரிவித்துள்ளார். படகு கவிழ்ந்தவுடன் அவர் நீந்தி கரை சேர்ந்துள்ளார்.
விபத்துக்குள்ளான படகில் 3 ஆண்கள், இரு பெண்கள், இரு சிறு பெண் பிள்ளைகள் என மொத்தம் 7 பேர் இருந்துள்ளனர். படகு குகாவோன் பகுதியில் இருந்து கலாஷி நோக்கி சென்று கொண்டிருந்தது. படகு விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.