ஜார்கண்ட் மாநிலத்தின் ஷாஹிப்கஞ் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தௌசிப்(18). இவரும், இவருடைய நண்பர்கள் சிலரும், கடந்த திங்கள்கிழமை மாலை, அந்தப் பகுதியில் இருக்கும் கல்குவாரி குளத்தில் குளிக்கச் சென்றிருக்கிறார்கள். இவருடைய நண்பர்கள் குளத்தில் குளிக்கத் தொடங்கிய நிலையில், தௌசிப் மட்டும், குளத்தில் குதிப்பதை இன்ஸ்டா ரீல்ஸாக பதிவு செய்ய விரும்பியிருக்கிறார். அதற்காக ஒரு நண்பனிடம் செல்போனை கொடுத்து பதிவு செய்திருக்கிறார்.
சிறு தயக்கத்துக்குப் பிறகு, 100 அடி உயரத்திலிருந்து தௌசிப் அந்தக் குளத்தில் குதித்திருக்கிறார். குதித்த சில நொடிகள் அவர் நீந்தினாலும், அடுத்த சில வினாடிகளில் அவர் தன் சுயநினைவை இழந்துவிட்டார். அவரது உடல் தண்ணீரில் மெல்ல மூழ்க தொடங்கியது. தௌசிப் தண்ணீரில் மூழ்குவது ரீல்ஸ்காக செய்கிறார் என நினைத்த நண்பர்களுக்கு, அவர் உடல் முழுமையாக முழ்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். உடனே குளித்துக்கொண்டிருந்த நண்பர்கள் சிலர், அவரை மீட்க முயன்றனர். ஆனால், பயனில்லை.
அதைத் தொடர்ந்து, இது தொடர்பாக காவல்துறைக்கும், மீட்புக் குழுவுக்கும் தகவலளிக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர், சில மணி நேரத்துக்குப் பிறகு தௌசிப்பின் சடலத்தை மீட்டனர். குளிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88