Rave Party: பெங்களூரு பண்ணை வீடு; போதை பொருள்கள்; கட்டணம் ரூ.50 லட்சம்? – ரேடாரில் திரை பிரபலங்கள்!

நாடு முழுவதும் பார்ட்டி கொண்டாட்ட நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. அதே நேரம், பார்ட்டிகளில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பயன்பாட்டுக்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி கர்நாடகாவின் பெங்களூரில், ஒரு பண்ணை வீட்டில் ரேவ் பார்ட்டி (DJ Dance) நடந்திருக்கிறது. இந்த பார்ட்டியில் கலந்துகொள்ள நுழைவுக் கட்டணம் ரூ.50 லட்சம் என உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. `Sunset to Sunrise’ எனும் பெயரில் நடைபெற்ற இந்த ரேவ் பார்ட்டியில் சட்டவிரோத போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது.

காவல்துறை

அதைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடியாக அதிகாலை 3 மணிக்கு பார்ட்டிக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது, தடைசெய்யப்பட்ட MDMA மாத்திரைகள், கொகைன் போன்ற போதைப்பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த பார்ட்டியயின் ஒருங்கிணைப்பாளர் உட்பட 5 பேரையும், போதைப்பொருள் சப்ளையர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த பார்ட்டியில் கலந்துகொண்டதாக நடிகை ஹேமா உள்ளிட்ட பல கன்னட ஆந்திர சினிமா / டி.வி நடிகர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால், நடிகை ஹேமா அந்த பார்ட்டியில் கலந்துகொள்ளவில்லை என்றும் தான் ஹைதராபாத்தில் தான் இருப்பதாகவும் வீடியோ வெளியிட்டு மறுத்திருக்கிறார்.

போதை

மற்றொரு நடிகையான ஆஷி ராய்,“பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக அழைக்கப்பட்டேன். அதனால் அந்தப் பார்ட்டியில் கலந்துகொண்டேன். ஆனால், ரேவ் பார்ட்டி என்றால் எனக்கு என்னவென்று தெரியாது. அங்கு நடிகை ஹேமாவையும் பார்க்கவுமில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தப் பார்ட்டியில் கலந்துகொண்டர்வர்கள் என சந்தேகத்துக்குள்ளானவர்களிடம் காவல்துறை சோதனைக்கான ரத்த மாதிரிகளை சேகரித்து வருகிறது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேலும் இந்த பார்ட்டியில் 100 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர் என்றும், பார்க்கிங்கில் பல சொகுசு கார்கள் இருந்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆந்திர எம்.எல்.ஏ ஒருவரின் காரும் அங்கு இருந்திருக்கிறது. அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.