அரச வெசாக் விழா பிரதமர் தலைமையில் ஆரம்பம்

அதனுடன் இணைந்ததாக தொல்பொருள் கண்காட்சி ஆரம்பித்துவைக்கப்பட்டது

அரச வெசாக் விழா மகாசங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் தூதுவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நேற்று (2024.05.21) மாத்தளையில் ஆரம்பமானது.

சியாமோபாலி மகா நிகாய பிரிவின் மல்வத்து மகா விகாரையின் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி நாயக்க தேரர், ஷியமோபாலி பிரிவின் அஸ்கிரி பிரிவின் அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி நாயக்க தேரர், சியம் மகா நிகாயவின் ரங்கிரி தம்புலு விகாரையின் மகா நாயக்க தேரர் கலாநிதி இனாமலுவே ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரர் ஶ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய மல்வானே பஞ்ஞசார தேரர், சியம் மகா நிகாயவின் அஸ்கிரி தரப்பு மாத்தளை மாவட்ட பிரதம சங்கநாயக தேரர் சங்கைக்குரிய கொஸ்கொல்லே சீலரத்தன நாயக்க தேரர் உள்ளிட்ட மூன்று நிகாயக்களையும் சேர்ந்த மகா சங்கரத்தினர், ஏனைய சமய தலைவர்கள், புத்த சாசன சமய மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே, இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக பண்டார கோட்டேகொட, யதாமினி குணவர்தன, குணதிலக ராஜபக்ஷ, ரோஹினி கவிரத்ன, தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல பண்டார, சீனா, வியட்நாம், கொரியா நாடுகளின் தூதுவர்கள், பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகர், இந்திய துணை உயர் ஸ்தானிகர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள், புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன உட்பட அரச அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(படம் – சீன தூதுவர் கீ சென்ஹொன் பழைமைவாய்ந்த பௌத்த உருவச் சிலை ஒன்றைப் பற்றி கேட்டறிந்த போது.)

பிரதமர் ஊடகப் பிரிவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.