ரூ. 22.50 லட்சம் விலையில் பிஎம்டபிள்யூ S 1000 XR அறிமுகம்

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய பிஎம்டபிள்யூ S 1000 XR பைக்கில் பல்வேறு வசதிகளுடன் மணிக்கு 235 கிமீ வேகத்தை எட்டும் திறனை கொண்டுள்ள 999cc இன்லைன் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

S 1000 RR பைக்கில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை பெறுகின்ற S 1000 XR மாடல் 999cc இன்லைன் நான்கு சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 170bhp பவர் மற்றும் 114Nm வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கலர் டிஎஃப்டி, ரைடிங் மோடுகள், ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், இன்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய எலக்ட்ரானிக்ஸ் உதவியுடன் கூடிய வசதியை பெற்றுள்ளது.

USD முன் ஃபோர்க்குகள், மற்றும் மோனோஷாக் பெற்றுள்ள பைக்கில் முன்புறத்தில் இரட்டை டிஸ்க், பின்புறத்தில் ஒற்றை டிஸ்க்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்று 120/70 முன் மற்றும் 190/55 பின்புற டயர்களுடன் கூடிய 17 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது.

கூடுதலாக இந்த பைக்கிற்கு M package மூலம் M ஸ்போர்ட் சீட், M Endurance chain, M GPS-Laptrigger, sports silencer, விண்ட்ஸ்கீரின், கருப்பு நிற ஃபில்லர் கேப், M பேட்டரி, M ஃபோர்ஜ்டூ வீல் or M கார்பன் வீல்ஸ் பெற்று ரூ.2.50 லட்சம் கூடுதலாக கட்டணத்தை செலுத்த வேண்டும்.

BMW S 1000 XR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.