உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விலைகளை நிலையாகப் பேணும் வரி அறவீட்டை அமுல்படுத்துவதுற்கு அமைச்சரவைக்கு யோசனை முன்வைத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவ்வரியிலிருந்து மேலதிக இலாபம் கிடைக்குமாயின் ஏனைய முறைகளுக்கு ஊடாக அந்த இலாபத்தை நுகர்வோருக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ முன்வைத் வாய் மொழி மூலமான கேள்விக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காய என்பவற்றில் பற்றாக்குறை ஏற்பட்டால் மாத்திரம் அவ்வரியைக் குறைத்தல் தொடர்பாக கவனம் செலுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய விவசாய அமைச்சர்:
உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காய விவசாயிகளுக்கு ஏற்படும் அசாதாரணம் தொடர்பாக அமைச்சரவை உபகுழுவிலும் கலந்துரையாடப்பட்டது. தற்போது உருளைக் கிழங்கின் விலை அதிகரித்துள்ளது. எமக்குத் தேவையான விதை உருளைக்கிழங்குகள் அதிகளவில் வெளிநாடுகளில் இருந்தே கொண்டு வரப்பட்டன. விதை உருளைக்கிழங்குகளுக்கு அதிக நிதி செலவிடப்படுகின்றது.
இலங்கையில் விதை உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்காக வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் விதைகளுடன் போட்டியிடலாம். இலங்கை விவசாயிகள் நாட்டின் விதை உருளைக் கிழங்குகளுக்காக அதிக விருப்பம் காட்டுகின்றார்கள்.
அதனால் அதிக அறுவடையும் கிடைக்கின்றது. பெரிய வெங்காயத்திற்கும் இந்நிலை காணப்படுகின்றது. இந்தியாவின் தடை நீக்கப்பட்ட பின்னர் இன்று சந்தையில் மொத்த விலை 100ரூபா வரை குறைந்துள்ளது.
எதிர்காலத்தில் நிலையான விலையைப் பேணுவதற்காக விவசாயிகளின் உற்பத்திச் செலவிற்கேற்ப மேலதிக வரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன் ஊடாக நுகர்வோர் மற்றும் விவசாயிகள் எனும் இரு தரப்பினரையும் பாதுகாக்கும் வேலைத் திட்டமொன்றைத் தயாரிக்கலாம்.
சிறு கிழங்கு, வற்றாளை போன்ற மரக்கறிகளும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படுவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும், மரக்கறிகளை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வருவதில்லை. ஆனால் உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மாத்திரம் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் எதிர்காலத்தில் உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் போன்றவற்றையும் நமது நாட்டிலேயே உற்பத்தி செய்யும் முறைமையைத் தயாரிக்கவுள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
தற்போது சின்ன வெங்காயங்களை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். எதிர்வரும் போகத்தில் 100மூ ஆன சின்ன வெங்காயம் உள்ளுர் தேவைக்கு ஏற்றவாறு மேற்கொள்வதற்காக இவ்வேலைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை பாரியளவில் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் ஒரு காலத்தில் கரட் ஒரு கிலோ 3000 ரூபா வரை அதிகரித்திருந்தது. அதன்படி மீண்டும் மரக்கறிகளை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டமொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்காத போது இவ்வாறு மரக்கறிகளின் விலை குறைந்துள்ளது. இது நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் சிக்கல் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர விபரித்தார்.