டிவிஎஸ் ஐக்யூப் Vs ஏதெர் ரிஸ்டா ரேஞ்ச், நுட்பவிபரங்கள் விலை ஒப்பீடு

இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களின் டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஏதெர் ரிஸ்டா என இரண்டும் குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் இ-ஸ்கூட்டரின் வசதிகளை பெற்றதாக வெளியிடப்பட்டு இரு மாடல்களுக்கான ஒப்பீட்டை அறிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் ஐக்யூப் மாடலில் கூடுதலாக இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் என மூன்று வித பேட்டரியை பெற்று ரூ.1.08 லட்சம் முதல் ரூ.1.85 லட்சம் வரை கிடைக்கின்றது. ரிஸ்டா ஸ்கூட்டரில் இரண்டு வித பேட்டரியை பெற்ற 3 விதமான வேரியண்ட் உள்ளது.

Ather Rizta S,Z Ather Rizta Z TVS iQube 2.2kwh TVS iQube 3.4 kwh /S/ST TVS iQube ST 5.1kwh
மோட்டார் வகை PMSM PMSM BLDC BLDC BLDC
பேட்டரி 2.9Kwh 3.7kwh 2.2kwh 3.4kwh 5.1 kwh
பவர் 4.3kW 4.3kW 3kw 3kw 3kw
டார்க் 22 NM 22 NM 33 NM 33 NM 33 NM
ரேஞ்சு (IDC)/Charge 123 Km 160Km 75Km 100Km 150Km
ரைடிங் ரேஞ்சு/Charge 80-105 Km 120-140km 60-75km 75-100km 110-150Km
அதிகபட்ச வேகம் 80 Kmph 80 Kmph 75 Kmph 78 Kmph 82 Kmph
சார்ஜிங் நேரம் (0-80%) 6 hrs 40 Mins 4 hrs 45 mins 2 hrs 3hrs ST /4 hrs 30 mins 4 hrs 18 mins
ரைடிங் மோடு Zip and SmartEco Zip and SmartEco Eco and Power Eco and Power Eco and Power

ரிஸ்டா மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் என இரு மாடல்களும் மாறுபட்ட ரேஞ்ச் பெற்றிருந்தாலும், மிக சிறப்பான வசதிகளுடன் கூடியதாக அமைந்துள்ளது. குறிப்பாக ஐக்யூப் டாப் வேரியண்டில் 7 அங்குல தொடுதிரை கிளஸ்ட்டர் பெற்றிருக்கின்றது.

குறைந்த விலை ரிஸ்டா மற்றும் ஐக்யூப் ஒப்பீடும் பொழுது கூடுதலான ரேஞ்ச் வெளிப்படுத்தும் வகையில் ரிஸ்டா உள்ளது.

EMPS2024 மானியத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை தொகுக்கப்பட்டுள்ளது.

e-Scooter Price Price
TVS iQube 2.2kwh ₹ 1,08,042 ₹ 1,16,137
TVS iQube 3.4kwh ₹ 1,37,363 ₹ 1,48,564
TVS iQube S 3.4kwh ₹ 1,47,155 ₹ 1,58,983
TVS iQube ST 3.4kwh ₹ 1,56,290 ₹ 1,67,653
TVS iQube ST 5.1kwh ₹ 1,86,108 ₹ 1,96,437
Ather Rizta S 2.9 Kwh ₹  1,09,000 ₹ 1,17,312
Ather Rizta Z 2.9 Kwh ₹  1,29,999 ₹ 1,32,561
Ather Rizta Z 3.7 Kwh ₹ 1,49,999 ₹ 1,52,837

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.