மொத்த குடும்பமும் காதலுக்கு எதிர்ப்பு… காதலனுடன் சேர்ந்து தந்தையைக் கழுத்தறுத்துக் கொன்ற சிறுமி!

உத்தரப்பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில், கர்முல்லாபூர் கிராமத்தில் 17 வயது சிறுமி, தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையைக் காதலனுடன் சேர்ந்து கழுத்தறுத்துக் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

போலீஸாரின் கூற்றுப்படி, கொலைசெய்யப்பட்டவரின் பெயர் அஜய் பால் (50). கிராம வளர்ச்சி அலுவலரான இவருக்கு 17 வயதில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இருக்கிறார். இந்தச் சிறுமியும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்திருக்கின்றனர். இதைத் தெரிந்துகொண்ட அஜய் பால், காதலை விட்டுவிட்டு அந்த இளைஞரிடம் பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு மகளிடம் கூறி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். சிறுமியின் மொத்த குடும்பமும் இதையே கூறியிருக்கிறது.

Murder – கொலை

இதனால், சிறுமி தன் காதலனுடன் சேர்ந்து தன் குடும்பத்தினரை கொலைசெய்யத் திட்டம் போட்டிருக்கிறார். திட்டத்தின்படி திங்கள் இரவு சிறுமி தனது வீட்டின் உணவில் மயக்க மருந்து கலந்தார். வெளியில் நாய்க்கும் அதே மயக்கமருந்து கலக்கப்பட்ட உணவு வைக்கப்பட்டிருக்கிறது. உணவைச் சாப்பிட்ட குடும்பத்தினர் மயக்கமடைந்த பிறகு சிறுமி தன் காதலனுக்கு போன் செய்து வரவழைத்திருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து, மயக்க நிலையிருந்த அஜய் பாலை ரம்பத்தால் கழுத்தறுத்தனர்.

அப்போது திடீரென மயக்க நிலையிலிருந்து எழுந்த சிறுமியின் சகோதரனை இருவரும் சுத்தியால் தாக்கவே அவர் அலறினார். அந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் நுழைந்தபோது, அஜய் பால் கழுத்தறுக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டு உடனடியாக சிறுமியையும் அந்த இளைஞரையும் பிடித்து வைத்து, போலிஸுக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், அங்கு வந்த போலீஸார் சிறுமியையும் அவரின் காதலனையும் கைதுசெய்து அஜய் பாலையும், சிறுமியின் சகோதரனையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

கைது

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த இருவரில் அஜய் பால் நேற்று உயிரிழந்தார். இன்னொருபக்கம், கொலை செய்ததை போலீஸ் விசாரணையில் இருவரும் ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து இன்று பேசிய கன்னோஜ் காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் ஆனந்த், “இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுமியின் காதல் விவகாரமே இந்தக் கொலையின் அடிப்படைக் காரணம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.