சென்னை தமிழக அரசு சோதனை முறையில் மகளிர் குழுக்கள் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடை தையல் பணியை வழங்க உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தையல் பணிகள் மேற்கொள்ளும் மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 50 பள்ளிகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன்பின்னர் அனைத்து பள்ளிகளுக்கும் மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் சீருடையின் […]