நேற்றைவிட இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைந்துள்ளது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.70,000 வரை செல்லும் என்று சொல்லப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் கடைசி முதல் இந்த மாதம் தொடக்கம் வரை விறுவிறுவென ஏறிக்கொண்டே வந்தது. அப்போது தங்கம் விலை ரூ.55,000 தாண்டி சென்றது.
இந்த நிலையில், இந்த மாதத்தில் குறைய தொடங்கிய தங்கம் விலை, அட்சய திருதியைக்கு பின்பு மீண்டும் ஏறுமுகத்தை கண்டு பவுனுக்கு ரூ.55,000 தாண்டியது.
நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.6,860-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.54,880-க்கும் விற்பனை ஆனது. இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.110 குறைந்து ரூ.6,750-க்கும், பவுன் ஒன்றுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000-க்கும் விற்பனை ஆகி வருகிறது.
கடந்த திங்கட்கிழமை ரூ.100-ஐ தாண்டிய வெள்ளி விலை நேற்று ஒரு கிராமுக்கு ரூ.100.30-க்கு விற்பனை ஆனது. இன்று ரூ.3.30 குறைந்து ரூ.97.00-க்கு விற்பனை ஆகி வருகிறது.
ஆக, தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்னும் குறையுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம் மக்களே…