கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் அதிகரிப்பு

ஒரு தனி சேவையை ஏற்படுத்தும் அரசியலமைப்பு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு நாட்டில் 13,000 இற்கும் அதிகமான கிராம உத்தியோகத்தர்களுக்கு தனியான சம்பள மட்டம் வழங்கப்பட்டு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதற்கிணங்கஇலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சேவையை உருவாக்குவதற்காக அச்சேவை தொடர்பான சட்ட மூலம் அரசாங்க சேவைகள் ஆணை குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை, பாரிய வெற்றி என்றும் பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே, உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த நேற்று (22) வலியுறுத்தினார்.

அதற்கு இணங்க GN என்ற பெயரில் புதிய சம்பள கூறு ஒன்றை கிராம உத்தியோகத்தர்களுக்காக வழங்குவதுடன், புதிதாக இச்சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்களின் அடிப்படைச்சம்பளம் ரூபா 28,940 இலிருந்து ரூபா 30,140 வரை அதிகரித்துள்ளது.

கிராம உத்தியோகத்தர்கள் சேவை தரம் இரண்டில் உத்தியோகத்தர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் ரூபா 33,690 வரையும், தரம் 3 உத்தியோகத்தர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் ரூபா 38,590 வரை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பிரதேசம் மற்றும் எல்லைக்குள் மாதாந்த அலுவலகக் கொடுப்பனவாக ரூபா 1000 இலிருந்து 2000 வரையும், வருடாந்த எழுது கருவி கொடுப்பனவாக ரூபா1500 இலிருந்து 3000 வரை அதிகரிப்பை 2024.04.01இலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அது தவிர ஏனைய சீருடை,போக்குவரத்து, தொடர்பாடல் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக 2025 வரவு செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளும் போது, பொதுத் திறைசேரியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் க்கு பணிபுரி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்; விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்த வெற்றியை கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் தலைமையில் நிலமெதுரையில் 2024.05.20 அன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உத்தியோகத்தர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இந்தத் தீர்மானங்கள் தொடர்பாகதெளிவு படுத்தியதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்படி மிகவும் வினைத்திறன் மற்றும் விளைதிறன் மிகுந்த பொதுமக்கள் சேவையை மேற்கொள்வதற்காக, கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவை அதிகரித்தல் தொடர்பாக 2024.03.11 அன்று அமைச்சரவை தீர்மானத்தின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தனி சம்பள மட்டத்திற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளதாகவும், இலங்கை கிராம சேவை உத்தியோகத்தர்களுக்காக, இலங்கை கிராம சேவையின் சேவைப் பிரமாணங்கள் (சட்டமூலம்) அரசாங்க சபைகள் ஆணை குழுவின் அனுமதிக்காக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் அசோக பிரியந்த சுட்டி காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் அனுர திசாநாயக்கவின் நிலையான கட்டளை 27-2 இன் கீழ் பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர், பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு முன்வைத்த கேள்விக்கு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தொடர்ந்தும் இதன் போது குறிப்பிடுகையில் 1942 புதிய கிராம உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டமை பாரிய வெற்றி என வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.