விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பகுதி திருத்தங்கல். திருத்தங்கலில் பாலாஜி நகர் பகுதியில் ஆசிரியர் தம்பதியினர் தங்களது பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் ஆசிரியர் தம்பதியினரின் வீட்டுக்கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களின் வீட்டிற்குச் சென்று கதவை தட்டியிருக்கின்றனர். ஆனாலும் எந்த பதிலும் இல்லாததால் கதவு ஓட்டை வழியாகவும், ஜன்னல் கதவு வழியாகவும் எட்டிப் பார்த்துள்ளனர்.
அப்போது, ஆசிரியர் தம்பதியினர் அவர்களின் பிள்ளை உள்பட மொத்தம் 5 பேர் வீட்டிற்குள் எந்த அசைவுமற்றுக் கிடப்பது தெரியவந்ததுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து தீயணைப்பு மீட்புப் படையினர் மற்றும் திருத்தங்கல் போலீஸூக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்கையில், வீட்டில் ஆசிரியர் தம்பதியினர் உட்பட ஐந்து பேர் தற்கொலை செய்து இறந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “தற்கொலை செய்து கொண்டவர்களில் லிங்கம்-பழனியம்மாள் ஆகியோர் விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வந்தனர். இதுதவிர இறந்துகிடந்தது ஆசிரிய தம்பதியினரின் மகன், மகள் ஆனந்தவல்லி (வயது 28), இரண்டரை வயது பேத்தி ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது.
எங்களின் முதற்கட்ட விசாரணையில், காதல் திருமணம் செய்துகொண்ட லிங்கம் – பழனியம்மாள் தம்பதியினருக்கு அதிகப்படியான கடன் இருந்துவந்துள்ளது. ஆகவே கடன் பிரச்னையால் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb