மதுரை: கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த யூடியூபர் சவுக்கு சங்கர், கஞ்சா வழக்கில் பழனிசெட்டிபட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீஸார் சங்கரை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். நீதிமன்ற காவல் முடிந்து சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரது நீதிமன்றக் காவல் ஜூன் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மதுரை போதை பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால், விசாரணையை மே 27-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.