சென்னை சிபிசிஐடி காவல்துறையினர் தமிழக பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் கட்டுக்கட்டாக ரூ.4 கோடி சிக்கியது. நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரை விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி. […]