கியா வெளியிட்டுள்ள புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி EV3 காரில் 81.4kWh மற்றும் 58.3kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருப்பதுடன் முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உதவிகளை வழங்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் முதன்முறையாக ஜூன் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட்ட உள்ள EV3 இ-எஸ்யூவி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்திய சந்தைக்கு 2025 ஆம் ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படுகின்றது.
Kia EV3
மிக சிறப்பான பாக்ஸ் ஸ்டைல் டிசைனை பெற்றுள்ள இவி3 எலக்ட்ரிக் காரில் தற்பொழுது கியா கார்களில் இடம்பெறுகின்ற ‘star map’ எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்று மிக நேர்த்தியான கோடுகளை பெற்று இந்நிறுவனத்தின் பாரம்பரியமான ‘tiger nose’ கிரில் கொண்டதாக அமைந்துள்ளது.
4,300mm நீளம், 1,850mm அகலம், 1,560mm உயரம் பெற்றுள்ள காரின் அளவுகள் கியா செல்டோஸ் மாடலுக்கு இணையாக பெற்றுள்ள நிலையில் 2,680mm வீல்பேஸ் உள்ளது.
பக்கவாட்டில் கருமை நிறத்தை கொண்டுள்ள பிளாஸ்டிக் கிளாடிங் கொண்டு உயரமான வீல் ஆரச் பெற்றுள்ள மாடலில் சி-பில்லர் பகுதியில் இடம்பெறுள்ள கருமை நிறம் மிதக்கும் வகையில் மேற்கூறையை கொண்டுள்ளது.
பின்புறத்தில் செங்குத்தான எல்இடி விளக்குகள் மிக நேர்த்தியான பம்பர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக அமைந்துள்ளது.
கூடுதலாக கியா வெளியிட்டுள்ள EV3 GT-Line வேரியண்ட் சாதாரண மாடலை விட மாறுபட்ட கிரில் அமைப்பினை கொண்டு மிக நேர்த்தியான வித்தியாசங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
EV9 காரில் உள்ளதை போன்ற இன்டிரியரை பெற்றுள்ள இவி3 மாடலில் 12.3 அங்குல ட்வீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டுள்ளது. இரண்டு ஸ்போக் ஸ்டீயரிங் வீல் பெற்று அனைத்து விதமான கனெக்ட்டிவிட்டி வசதிகள் உட்பட அனைத்தும் இவி9 போலவே பெற்றுள்ளது.
12-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, ஆம்பியன்ட் விளக்குகள் மற்றும் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெற்றுள்ளது. EV3 மாடலில் முதன்முறையாக தனிப்பட்ட AI உதவியை பெற்ற முதல் கியா எலக்ட்ரிக் காராகும்.
கியா EV3 பேட்டரி, ரேஞ்ச்
58.3kWh பேட்டரி பேக் பெற்றுள்ள குறைந்த ரேஞ்ச் மற்றும் அதிக ரேஞ்சு வழங்கும் 81.4kWh என இரண்டு மாடலிலும் முன்புறத்தில் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு 201hp மற்றும் 283Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.
மணிக்கு அதிகபட்சமாக 170 கிமீ வேகத்தை எட்டுகின்ற இந்த காரில் உள்ள 81.4kWh வேரியண்ட் பெற்ற மாடல் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 600 கிமீ ரேஞ்ச் (WLTP cycle) வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
400V கட்டமைப்பினை பெற்றுள்ள 31 நிமிடங்களில் 10 முதல் 80 சதவிகிதம் சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது, மேலும் EV3 எஸ்யூவி வாகனத்திலிருந்து (V2L) திறன்களை பெற்றுள்ளது.
கியா EV3 எஸ்யூவி விலை USD 35,000-50,000 (தோராயமாக ரூ. 30 லட்சம்-42 லட்சம்) வெளிப்படுத்துகின்றது.