2024 பஜாஜ் பல்சர் 220F vs பல்சர் F250 இரு பைக்குகளுக்கான வித்தியாசம் மற்றும் விலை

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் வரிசையில் இடம்பெற்றுள்ள இரண்டு செமி ஃபேரிங் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற பல்சர் 220F vs பல்சர் F250 என் இரண்டு மாடல்களுக்கு இடையிலான வித்தியாசங்கள், வசதிகள் மற்றும் விலை ஒப்பீடு என அனைத்தும் அறிந்து கொள்ளலாம்.

இரண்டு ஃபேரிங் ஸ்டைல் மாடலும் சில மாதங்கள் சந்தையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும் கரீஸ்மா XMR 210 விற்பனைக்கு வந்த உடனே கிடைக்க துவங்கிய நிலையில், தற்பொழுது 2024 ஆம் ஆண்டிற்கான பல்சரின் டிஜிட்டல் கிளஸ்ட்டர் உட்பட சில முக்கிய மேம்பாடுகள் மற்றும் புதிய நிறத்துடன் பாடி கிராபிக்ஸ் என அனைத்தும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் பல்சர் பைக் வரிசையில் மூன்று N பைக்குகள், நான்கு NS பைக்குகள்,  இரண்டு F பைக்குகள் மற்றும் கிளாசிக் ஸ்டைல் பெற்ற 125, 150 என இரண்டு பைக்குகள் மற்றும் முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்ட RS200 என மொத்தமாக 12 பைக்குகள் கிடைக்கின்றன.

2024 Pulsar 220F Vs Pulsar F250

செமி ஃபேரிங் செய்யப்பட்ட இரண்டு மாடல்களும் புதுப்பிக்கபட்ட நிறங்களுடன் டீலர்களை வந்தடைந்துள்ள நிலையில் அதிகாரப்பூர்வமாக விலை அறிவிக்கப்படவில்லை என்றாலும் பஜாஜ் ஆட்டோ டீலர்கள் உறுதிப்படுத்தியுள்ள 220F vs F250 தமிழ்நாட்டின் ஆன் ரோடு விலை மற்றும் நுட்பவிபரங்கள் என அனைத்தையும் அறியலாம்.

இரண்டு பைக்குகளுக்கான என்ஜின் சிசி, மைலேஜ் உட்பட பவர் டார்க் விபரங்கள் அட்டவனையில் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

Pulsar F220 Pulsar 250F
என்ஜின் 220cc single cyl Air cooled 249.07cc single cyl oil cooled
பவர் 20.4 PS 24.5 PS
டார்க் 18.55Nm 21.5Nm
கியர்பாக்ஸ் 5 speed 5 speed
மைலேஜ் 44 kmpl 40 kmpl

குறிப்பாக என்ஜின் தொடர்பான வசதிகளில் F250 மாடலின் 220F பைக்கினை விட சிறப்பான வகையில் பவர் வெளிப்படுத்துவதுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் ஏபிஎஸ் மோடுகள் (Road, Rain மற்றும் Offroad) மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதியை பெற்றுள்ளன. இந்த வசதிகளை 220F ஆனது பெறவில்லை.

2024 பஜாஜ் பல்சர் 220F vs பல்சர் F250 என்ஜின்

இரண்டு பைக்குகளுமே சமீபத்தில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று கனெக்ட்டிவிட்டி வசதியினை பெற ப்ளூடூத் வாயிலாக ஸ்மார்ட்போனை இணைப்பதன் மூலம்  அழைப்புகளை ஏற்க அல்லது நிராகரிக்கும் வசதி உட்பட மொபைல் தொடர்பான பேட்டரி இருப்பு, சிக்னல், எஸ்எம்எஸ் அலர்ட் அம்சங்கள், பைக் சார்ந்த மற்ற அம்சங்களாக பெட்ரோல் இருப்பு, சராசரி மைலேஜ் விபரம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். கியர் பொசிஷன் இன்டிகேட்டர், சராசரி மைலேஜ் உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.

F250, 220F என இரு மாடலும் தொடர்ந்து டெலிஸ்கோபிக் ஃபோரக் மட்டும் பெறுகின்ற நிலையில் 250F பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பெனஷனும், 220F தொடர்ந்து இரட்டை ஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது.

Pulsar 220F Pulsar F250
முன்பக்க சஸ்பென்ஷன்  டெலிஸ்கோபிக் ஃபோர்க் 37 mm டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்புறம் சஸ்பென்ஷன்  ட்வீன்ஷாக் அப்சார்பர் மோனோஷாக்
டயர் முன்புறம் 90/90-17 110/80-17
டயர் பின்புறம் 120/80-17 140/70-17
பிரேக் முன்புறம் 280mm டிஸ்க் 300mm டிஸ்க்
பிரேக் பின்புறம் 230mm டிஸ்க் 230mm டிஸ்க்
வீல்பேஸ் 1350mm 1358mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 165mm 165mm
எடை 160 KG 166 KG
எரிபொருள் டேங்க் கொள்ளளவு 15 லிட்டர் 14 லிட்டர்
இருக்கை உயரம் 795mm 795mm

Bajaj Pulsar 220F Vs F250 ஆன்ரோடு விலை ஒப்பீடு

இரண்டு மாடல்களுக்கும் இடையில் என்ஜின் உன்பட வசதிகள் மற்றும் பாடி கிராபிக்ஸ் என பலவற்றில் மாறுதல் கொண்டுள்ள நிலையில் இரு மாடல்களுக்கான விலை வித்தியாசம் ரூ.10,000 வரை அமைந்துள்ளது.

எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
Pulsar F220 ₹ 1.41 லட்சம் ₹ 1.71 லட்சம்
Pulsar F250 ₹ 1.51 லட்சம் ₹ 1.82 லட்சம்

(All price Tamil Nadu)

கூடுதல் மைலேஜ், ரெட்ரோ ஸ்டைல் ஃபேரிங் போன்றவற்றை விரும்புபவர்களுக்கு ஏற்றதாக பல்சர் 220F, நவீனத்துவமான டிசைன், பல்வேறு ஸ்டைலிங் அம்சங்கள், மோனோஷாக் சஸ்பென்ஷன் சிறப்பான பவர் ஆகியவற்றை விரும்புபவர்கள் பல்சர் F250 பைக்கினை வாங்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.