முரட்டு மைலேஜ் கொடுக்கும் மாஸான கார்… மாருதி சுசுகி Swift மாடலில் வந்துள்ள மாற்றங்கள் என்னென்ன?

Maruti Suzuki New Swift Car: வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும், ஒரு குறிக்கோள் இருக்கும். இந்தியாவில் மத்திய நடுத்தர வர்க்கத்தினரை எடுத்துக்கொண்டால் நிலம் வாங்குவது ஒரு குறிக்கோள் என்றால், வீடு கட்டுவது என்பது நீண்ட கால லட்சியமாக இருக்கும். அதுவும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனை அழைத்து உங்களின் வாழ்வின் லட்சியம் என்னவென்று கேட்டால் அதில் கார் வாங்க வேண்டும் என்பது அதில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். 

எப்படி நிலம் வாங்கி வீடு கட்டுவதை ஒரு குறிக்கோளாக பார்க்கிறோமோ அதேபோல், கார் வாங்குவதும் அந்த பட்டியலில் வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. காரை செகண்ட் ஹாண்டில் வாங்குவது ஒருபுறம் என்றால் புத்தம் புதிய மாடல் கார்களை வாங்கவும் பலரும் விருப்பப்படுகிறார்கள். நிலம் வாங்குவது ஒரு நல்ல முதலீடாக பார்க்கப்பட்டாலும் அவசரமாக அவசரமாக வீடு கட்டுவதோ அல்லது கார் வாங்குவதோ சரியான முதலீடு கிடையாது என்பதே பலரின் கருத்தாக இருக்கும். 

புதிய Swift…

இருப்பினும், இந்திய சமூகத்தில் வீடு மற்றும் கார் ஆகியவை பெரிய கனவாக பார்க்கப்படுவதால் அவற்றின் மீதான ஈர்ப்பு மட்டும் குறைந்தபாடில்லை. எனினும் நம் மக்கள் பட்ஜெட் விலையில் அதிக மைலேஜ் கொடுக்கும் கார்களையே விரும்புவார்கள். எனவே கார் நிறுவனங்களும் இந்திய சந்தையை குறிவைத்து தனது தயாரிப்புகளை கொண்டு வரத் தொடங்கின. அந்த வகையில், மாருதி சுசுகி நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ள புதிய Swift மாடல் நம் மக்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. புதிய Maruti Suzuki Swift மாடலின் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.

மாருதி சுசுகி நிறுவனம் அதன் 4th Generation Swift காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது 25 கி.மீ., மேல் மைலேஜ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.64 லட்சம் வரை இந்த மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் குஜராத்தில் உள்ள சுசுகி மோட்டார் தயாரிப்பு ஆலை உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பழைய மாருதி சுசுகி Swift மாடல்களை விட இந்த மாடலின் தோற்றத்தில் இருந்து பல அம்சங்கள் பக்காவாக மாற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாக, புதிய எஞ்சின் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாற்றங்கள் என்னென்ன?

மாருதி சுசுகி நிறுவனம் K Series 1.2 லிட்டர் Four Cylinder பெட்ரோல் எஞ்சினில் (90PS மற்றும் 113Nm) இருந்து தற்போது Z Series 1.2 லிட்டர் Three Cylinder பெட்ரோல் எஞ்சினுக்கு (82PS மற்றும் 112Nm) மாற்றப்பட்டுள்ளது. இதில் பவரும், டார்க்கும் குறைந்துள்ளதால் நீங்கள் இந்த புதிய காரை ஓட்டும்போது பழைய துருதுருப்பு இதில் தவறவிடுவீர்கள். 

கியரை பொறுத்தவரை 5 ஸ்பீடு மெனுவல் கியர் (5-Speed MT) மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் (5-Speed AMT) ஆகியவை இந்த புதிய காரில் வழங்கப்படுகிறது. எனவே, ஆட்டோமேட்டிக் கியர் பிரியர்களும் இந்த காரை நிச்சயம் வாங்கலாம். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டும் காரை ஸ்மூத்தாக இயக்க வழிவகை செய்யும். குறிப்பாக ஆட்டோமேட்டிக் கியரிலும் மாருதி சுசுகி சிறப்பான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஆட்டோமேட்டிக்கில் கியர் மாறும்போது கூட அதனை உங்களால் உணர முடியும். 

முன்னர் கூறியது போல் இது பெட்ரோல் எஞ்சின் கொண்ட காராகும். இருப்பினும் இந்த காரில் கிடைக்கும் மைலேஜ் என்பது பலருக்கும் ஷாக் அளிக்கும். ஆம் பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த காரை மேனுவல் கியரில் 24.8kmpl மைலேஜை வழங்குகிறது. அதுவே, ஆட்டோமேட்டிக் கியர் என்றால் 25.75kmpl மைலேஜ் கிடைக்கும். டாடா, ஹூண்டாய், ரெனால்ட் ஆகிய நிறுவனங்களின் மாடல்களை விட இந்த பெட்ரோல் எஞ்சின் காரில் அதிக மைலேஜ் கிடைக்கிறது. இந்த புதிய வகை காரை அதிக மைலேஜிற்காக மட்டுமே மாருதி சுசுகி நிறுவனம் வடிவமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

எனவே, பட்ஜெட் விலையில் அதிக மைலேஜ் தரும் கார்களை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு மாருதி சுசுகியின் இந்த புதிய வகை Swift கார் என்பது ஒரு வரப்பிரசாதம் எனலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.