டேட்டாவும் ஜாஸ்தி… இணைய வேகமும் அதிகம்… ஆனால் விலை குறைவு – பிஎஸ்என்எல் பட்ஜெட் பிளான்

BSNL Fibre Broadband 599 Rupees Plan: இந்திய தொலைத்தொடர்பு துறை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது எனலாம். இரு நிறுவனங்களும் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் பொருட்டும் பல்வேறு ரீசார்ஜ் பிளான்களை வழங்கி வருகின்றன. டேட்டா சார்ந்து தற்போதைய வாடிக்கையாளர்களின் தேவை மாறிவிட்டதால் அதற்கெற்ப இரு நிறுவனங்களும் தங்களின் திட்டங்களை வழங்கி வருகின்றன.

குறிப்பாக, இந்த நிறுவனங்கள்தான் 5ஜி சேவையை இந்தியா முழுவதும் வரம்பற்ற வகையில் வழங்கி வருகின்றன. இதுவரை 5ஜி சேவைக்கு என பிரத்யேக கட்டணமோ அல்லது அதற்கான டேட்டா கட்டுப்பாடோ ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களில் செய்யப்படவில்லை எனலாம். இதனால், இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. 5ஜி இணைய சேவை கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன்படும் முக்கிய விஷயமாகவும் இருக்கிறது.மொபைல்களுக்கு மட்டுமின்றி பிராட்பிராண்டிலும் 5ஜி சேவையை இரு நிறுவனங்களும் வழங்குகின்றன.

தக்கவைக்கும் பிஎஸ்என்எல்  

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்த்தாலும் வோடபோன் ஐடியா மற்றும் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஆகியவை தொடர்ந்து சந்தையில் தங்களின் இருப்பை தக்கவைத்து வருகின்றன. குறிப்பாக, பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு விஷயங்களை மேற்கொண்டு வரும் சூழலில், தற்போதைய வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது எனலாம். பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. 5ஜி சேவை விரைவில் கொண்டு வரப்படும் எனவும் கூறப்படுகிறது. 

மொபைலுக்கு மட்டுமின்றி பிராண்ட்பிராண்டிலும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகின்றது. குறைந்த விலையில் நிறைந்த சேவை அளிக்கும் நிறுவனம் என பெயர் பெற்றது, பிஎஸ்என்எல். அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் பிஎஸ்என்எல் பிராட்பிராண்டில் குறைந்த விலையில் நிறைந்த சேவையை அளிக்கும் ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இருப்பினும் இது புதிய திட்டம் இல்லை, ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள ஒரு பிராட்பிராண்ட் திட்டத்தில் தற்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும் வகையில் மாற்றம் செய்துள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம்.

599 ரூபாய் பிராட்பிராண்ட் பிளான்

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் Fibre பிராட்பிராண்டில் ஏற்கெனவே உள்ள 599 ரூபாய் பிளானில் தற்போது கூடுதல் பலன்களுடன் முன்பை விட அதிகவேகமாக இணைய சேவையையும் வழங்க உள்ளது. இந்த 599 ரூபாய் பிளான், பிஎஸ்என்எல் Fibre பேஸிக் பிளஸ் பிளான் ஆகும். இதனை கடந்த 2020ஆம் ஆம்டில் இருந்தே பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த பிளானை வழங்கி வருகிறது.

இந்த திட்டத்தில் முன்பு 3.3 TB மாதாந்திர டேட்டா 60Mbps இணைய வேகத்தில் வழங்கப்பட்டு வந்தது. மேலும், டேட்டா முடிந்துவிட்டால் இணையம் 2Mbps வேகத்திற்கு குறைந்துவிடும். இந்த பிளானில் தான் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிளான் தற்போது 60 Mbps இணைய வேகத்தில் இருந்து 100 Mbps ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் உங்களுக்கு இனி அப்லோட் ஸ்பீடும், டவுண்லோட் ஸ்பீடும் வேகமாக இருக்கும் எனலாம்.

இந்த திட்டத்தில் ஒரு மாதத்திற்கு 3.3TB வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு மாதத்திற்கு 4000GB டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், இந்த டேட்டா முடிந்துவிட்டால் இணையம் 4 Mbps வேகத்திற்கு குறைந்துவிடும். இந்த பிளானில் லேண்ட்லைன் வசதியும் கிடைக்கும். இதில் லோக்கல் மற்றும் எஸ்டிடீ வரம்பற்ற வகையில் உள்ளது. 

மற்றொரு 599 ரூபாய் பிளான்

பிஎஸ்என்எல் நிறுவனம் Fibre பிராட்பிராண்டில் மற்றொரு பிளானையும் 599 ரூபாய்க்கு வருகிறது. இருப்பினும் இது மேலே குறிப்பிட்ட பிளானை விட சற்று மாறுபட்டது எனலாம். இந்த பிளானில் 4000GB டேட்டா, 75 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தின் இலவச அணுகலை வழங்குகிறது. இந்த ஓடிடி தேவை என்றபட்சத்தில் இந்த பிளானை நீங்கள் பெறலாம். அதிக வேகத்தில் இணையம் வேண்டுமென்றால் முந்தைய பிளானை பெறவும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.