₹ 3.30 கோடியில் மெர்சிடிஸ் AMG S 63 E பெர்ஃபாமென்ஸ் வெளியானது

இந்தியாவில் ரூ.3.30 கோடியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள S-Class வரிசையில் இடம்பெற்றுள்ள AMG S 63 E பெர்ஃபாமென்ஸ் மாடலை தவிர கூடுதலாக ரூ.3.80 கோடியில் S63 E Performance Edition 1 சிறப்பு மாடலும் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பு S63 E Performance Edition 1 குறிப்பிட்ட எண்ணிக்கையில் Manufaktur Alpine Grey நிறத்தை பெற்று மேட் பிளாக் நிறத்தை கொண்ட 21 அங்குல வீல் ஃபோர்ஜ்டூ பெற்றதாக அமைந்துள்ளது. AMG எக்ஸ்குளூசிவ் அம்சங்களை பெற்று பல்வேறு ஸ்டைலிஷான மாற்றங்களை கொண்டுள்ள இந்த மாடலின் ‘Edition 1’  பேட்ஜ் ஆனது டேஸ்போர்டில் பெற்றுள்ளது.

MBUX மென்பொருள் பெற்றுள்ள  பிரத்யேக “சூப்பர் ஸ்போர்ட்”  தீமை கொண்டுள்ள வழக்கமான எஸ்-கிளாஸ் போலவே,  12.8-இன்ச் OLED தொடுதிரை டாஷ்போர்டில் மையமாக உள்ளது. நிலையான உபகரணங்களில் 4-மண்டல காலநிலை கட்டுப்பாடு, பர்மெஸ்டர் 3D சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், 64-வண்ண சுற்றுப்புற விளக்குகள் மற்றும் நிலை 2 ADAS ஆகியவை கொண்டுள்ளது.

4.0-லிட்டர் ட்வீன்-டர்போசார்ஜ்டு V8 PHEV என்ஜின் 13.1kWh பேட்டரி மற்றும் பின்புற வீலுக்கு ஒரு மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. மோட்டார் மட்டும் 190hp மற்றும் 320Nm உற்பத்தி செய்கிறது, எனவே ஒட்டுமொத்தமாக 802hp மற்றும் 1,430Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. மேலும் இந்த காரில் இடம்பெற்றுள்ள பேட்டரி தொழில்நுட்பம் ஃபார்முலா 1 பிரிவில் பெற்றதாக மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது.

9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ள ஏஎம்ஜி S63 மாடலில் 8 விதமான டிரைவிங் மோடுகள் கொண்டுள்ளது. இதில் உள்ள முழுமையான எலக்ட்ரிக் முறையில் மணிக்கு 125kph வேகத்தில் பயணிக்கும் திறனுடன் ரேஞ்ச் 33 கிமீ ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.