ரூ.3.35 கோடியில் மெர்சிடிஸ்-மேபெக் GLS 600 விற்பனைக்கு வெளியானது

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்திய சந்தையில் MY24 மேபெக் ஜிஎல்எஸ் 600 (Mercedes-Maybach GLS 600) மாடலை ரூ.3.35 கோடியில் வெளியிட்டுள்ளது. புதிய மாடல் பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்ளை பெற்று கூடுதல் இன்டிரியர் வசதிகளை பெற்றுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் ஒரு புதிய பம்பர் பெற்றுள்ள மாடலின் மத்தியில் மிக நேர்த்தியான Maybach லோகோ பெற்றுள்ள நிலையில், கருப்பு, போலார் ஒயிட் மற்றும் சில்வர் மெட்டாலிக் என மூன்று நிறங்களை கொண்டுள்ள காரில் கூடுதலாக இரட்டை வண்ண நிறத்தை பெற கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

அடிப்படையாக 22 அங்குல வீல் பெற்றுள்ள GLS 600 மாடலில் கூடுதலாக 23 அங்குல வீல் வழங்கப்படுகின்றது. முழுமையாக எல்இடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட இன்டிரியரில் MBUX மென்பொருள் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உட்பட 590W Burmester 3D ஆடியோ சிஸ்டம்,  மசாஜ் வசதியை பெற்ற பின்புற இருக்கைகள், Level 2 ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெற்றுள்ளது.

மணிக்கு அதிகபட்ச வேகம் 250 கிமீ ஆக உள்ள மெர்சிடிஸ-AMG மூலம் பெறப்பட்ட 4.0-லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ்டு V8 இன்ஜின் 557hp மற்றும் 770Nm டார்க் உற்பத்தி செய்கிறது. 22hp மற்றும் 250Nm கூடுதலாக வழங்கும் 48V ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டரையும் பெறுகிறது. இந்த என்ஜின் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டு, 4Matic மூலம் நான்கு வீல் டிரைவ் பெறுகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.