கர்நாடக மாநிலம் ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது அதே தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ப்ரஜ்வால் ரேவண்ணா தன் மீதான விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ-வில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை அதிகாரிகள் முன்பு இந்த வாரம் ஆஜராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி வந்ததாக ப்ரஜ்வால் ரேவண்ணா மீது கடந்த மாதம் புகார் […]