சாதனை படைத்த இராணுவ பரா தடகள வீர்ர்களுக்கு இராணுவ தளபதியின் பராட்டு

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாவாணையற்ற அதிகாரி II கேஏ சமித்த துலான் மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் பணிநிலை சார்ஜன் எச்ஜீ பாலித பண்டார ஆகிய இருவரும் ஜப்பானில் நடைபெற்ற கோப் 2024 பரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

அவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதற்காக, அவர்கள் 27 மே 2024 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால் தனது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர்.

நாட்டிற்கும் இராணுவத்திற்

கும் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களின் சாதனைகளை லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பாராட்டியதுடன் ஒவ்வொரு விளையாட்டு வீரருடனும் உரையாடலில் ஈடுபட்டார். அவர்களின் சர்வதேச சாதனைகளைப் பாராட்டும் வகையில், இரு விளையாட்டு வீரர்களுக்கும் இராணுவத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னங்கள் மற்றும் நிதி ஊக்கத்தொகைகளை வழங்கியதுடன் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இச் சந்திப்பின் போது விளையாட்டு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் ஜீஏடி கொடவத்த ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களும் உடனிருந்தார்.

அதிகாரவாணையற்ற அதிகாரி II கேஏ சமித்த துலான் பரா ஈட்டி எறிதல் F-44 பிரிவில் உலக சாதனையையும் (தூரம் – 66.49 மீ), அதே நேரத்தில் பரா ஈட்டி எறிதல் நிகழ்வில் (எப்-44/எப்-64) வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றதுடன் பணிநிலை சார்ஜன் எச்ஜீ பாலித பண்டார ஜப்பானில் நடைபெற்ற கோப் 2024 பரா தடகள உலக சாம்பியன்ஷிப்பின் போது பரா குண்டெறிதல் போட்டியில் (எப்-42) வெண்கலப் பதக்கத்தை (தூரம் – 14.27 மீ) வென்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.