இந்தியாவில் விற்பனை செய்யபடுகின்ற மிகவும் குறைந்த விலையில் பேட்டரி ஸ்வாப்பிங் நுட்பத்துடன் கூடிய பவுன்ஸ் மொபைலிட்டியின் இன்ஃபினிட்டி E1X இ-ஸ்கூட்டரின் விலை ரூ.55,000 ஆக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக மணிக்கு 65 கிமீ வேகத்தை பெற்றுள்ள டாப் இன்ஃபினிட்டி E1+X வேரியண்டின் விலை ரூ.65,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 80 கிமீ பயணிக்கலாம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்கூட்டரின் விலை பேட்டரி பேக் இல்லாமல் மட்டும் வழங்கப்படுகின்றது.
பேட்டரி பேக்கினை ஸ்வாப்பிங் முறையில் இந்நிறுவனத்தின் ஸ்வாப் மையங்களில் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுவதனால் பேட்டரி பேக்கிற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லாமல் பேட்டரிக்கான சார்ஜிங் கட்டணத்தை மட்டும் சந்தா முறையில் செலுத்த வேண்டியிருக்கும்.
முதலில் இன்ஃபினிட்டி E1X மாடலின் நுட்பவிபரங்கள் பின் வருமாறு;-
- 1.1kW மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்ச வேகம் மணிக்கு 55 கிமீ ஆகும்.
- 90 கிமீ முழுமையான சிங்கிள் சார்ஜில் வெளிப்படுத்தும்.
இன்ஃபினிட்டி E1+X மாடலின் நுட்பவிபரங்கள் பின் வருமாறு;-
- 1.5kW மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்ச வேகம் மணிக்கு 65 கிமீ ஆகும்.
- 80 கிமீ முழுமையான சிங்கிள் சார்ஜில் வெளிப்படுத்தும்.
- பின்புறத்தில் 120-90/12 அங்குல டயர் உள்ளது.
இரு ஸ்கூட்டர்களுக்கும் பொதுவான அம்சங்கள்
- இரு பக்க டயர்களில் டிஸ்க் பிரேக் பெற்று 220mm முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் 204mm ஆகும்.
- டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்று பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் உள்ளது.
- 93 கிலோ எடை கொண்டுள்ள மாடலில் 780mm இருக்கை உயரம், கிரவுண்ட் கிளியரண்ஸ் 155mm
- 12 அங்குல வீல் பெற்றுள்ள மாடலில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று ஈக்கோ, பவர் மற்றும் டர்போ என மூன்று விதமான ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது.
நாடு முழுவதும் 60க்கு மேற்பட்ட டீலர்களை பெற்றுள்ள பவுன்ஸ் நிறுவனம் மிக சிறப்பான ஸ்வாப்பிங் நுட்பத்தை வழங்கி வரும் நிலையில் இன்ஃபினிட்டி E1X, E1+X என இரண்டின் டெலிவரியும் ஜூன் முதல் வாரத்தில் துவங்க உள்ளது.