ICC T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை 2024 தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட தொடராக உள்ளது.
இதில் 20 அணிகளும் தலா 5 அணிகளாக 4 பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நடைபெறும் குரூப் சுற்றில், ஒரு அணி தங்களின் பிரிவில் இருக்கும் மற்ற 4 அணிகளுடன் தலா 1 முறை மோதும்.குரூப் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும். அதாவது நான்கு பிரிவுகளில் இருந்து மொத்தம் 8 அணிகள் இந்த சுற்றில் மோதும்.
இந்த சுற்றில் 8 அணிகளும் தலா 3 போட்டிகளில் மோதும். சூப்பர் 8 சுற்றில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும். அதில் வெற்றி பெறும் அணிகள் மே 29ஆம் தேதி இறுதிப்போட்டியில் மோதும். நீண்ட நெடிய இந்த தொடரின் முன்னணி அணிகல் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் மீதும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. ஏதாவது ஒரு பிரிவில் கத்துக்குட்டிகள் அணி சூப்பர் 8 சுற்று வரை முன்னேற வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
இதில் இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த குரூப்பில் பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளும் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் டாப் 2 இடங்களை கைப்பற்ற முட்டிமோதும் எனலாம். பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. சி பிரிவில் நியூசிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகள் இருக்கின்றன. டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், நெதர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் சி, டி பிரிவில்தான் கடும் போட்டி நிலவுகிறது. இதில் ஒரு முக்கிய அணி வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய அணி மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி என சீனியர் வீரர்களுக்கு இது கடைசி டி20 உலகக் கோப்பையாக கூட அமைய வாய்ப்பிருக்கிறது என்பதால், 2007ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் கோப்பையை இந்தியா கைப்பற்ற சிறந்த வாய்ப்பாகவும் உள்ளது. அந்த வகையில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.மேலும் போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறுகிறது என்பதால் அது இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
இந்த சந்தேகத்தை தீர்க்கும் வகையில், இந்திய அணி மோதும் போட்டிகள் எந்த மைதானத்தில் எத்தனை மணிக்கு நடைபெறும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.இப்போதைக்கு குரூப் சுற்று போட்டிகள் மட்டுமே உறுதியாகி உள்ளது என்பதால் அந்த தகவல்களை மட்டும் இங்கு காணலாம்.
ஜூன் 5 -இந்தியா vs அயர்லாந்து – நியூயார்க் – இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
ஜூன் 9 – இந்தியா vs பாகிஸ்தான் – நியூயார்க் – இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
ஜூன் 12 – அமெரிக்கா vs இந்தியா – நியூயார்க் – இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
ஜூன் 15 – இந்தியா vs கனடா – நியூயார்க் – இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
இந்திய பார்வையாளர்களின் வசதிக்காக இந்திய அணிகளின் அனைத்து போட்டிகளும் குரூப் சுற்றில் அமெரிக்காவில் வைத்தே நடைபெறுகிறது, அங்கு நியூயார்க் உள்ளூர் நேரடிப்படி மதியம் 2.30 மணிக்கே போட்டி திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சூப்பர் 8 சுற்று போட்டிகள் அனைத்தும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. அங்கு நடைபெறும் போட்டிகளும் ஒன்று இரவு 8.30 மணிக்கு (இந்திய நேரப்படி) ஒளிப்பரப்பாகும் அல்லது இரவு 10.30 மணிக்கு (இந்திய நேரப்படி) ஒளிபரப்பாகும்.எனவே, இந்தி ரசிகர்கள் சில போட்டிகளுக்கு மட்டும் நள்ளிரவு வரை விழித்திருக்க வேண்டியிருக்கும்.இந்திய அணி ஒருவேளை அரையிறுதிக்கு தகுதிபெற்றால் கயானா மைதானத்தில் விளையாடும். அந்த போட்டி இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கும். இறுதிப்போட்டியும் இரவு 7.30 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கும்.
மேலும் படிக்க |கம்பீர் லக்னோ அணியை கைவிட்டது எப்படி? ஷாருக்கான் வீட்டில் நடந்த ரகசிய மீட்டிங்..!