கஸ்டமைஸ்டு கான்டினென்டினல் ஜிடி 650 மாடலை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

இங்கிலாந்தில் நடைபெறுகின்ற 2024 Savile Row Concours அரங்கில் ராயல் என்ஃபீல்டின் கான்டினென்டினல் ஜிடி 650 மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் கஸ்டமைஸ்டு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடல் இங்கிலாந்தின் டாப்கியர் இதழ் , ராயல் என்ஃபீல்டு மற்றும் இங்கிலாந்தில் உள்ள திறமையான கைவினை கலைஞர்கள் மூலம் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. ஜிடி 650 பைக்கில் உள்ள பிரத்தியேக பாடி கிராபிக்ஸ் அலெக்சாண்டர் கால்டரின் BMW 3.0 CSL Le Mans காரின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம் ஆனது Baak நிறுவனத்தின் மூலம் பெறப்பட்டு, NTR R3 முழுமையான அட்ஜெஸ்டபிள் பின்புற சஸ்பென்ஷன், Nitron’s கம்பிளிட் கார்டிஜ் முன்புற அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன், 36-ஸ்போக்குகளை பெற்ற Bridgestone Battlax BT46 டயர் பொருத்தப்பட்டுள்ளது.

ஹாரீஸ் பெர்ஃபாமென்ஸ் வடிவமைத்த ஃபேரிங் பேனல்களை பெற்று ஹாரிஸின் மேக்னம் ரேசர், வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் ஒரு ஃப்ளைஸ்கிரீனை நேர்த்தியாக ஒருங்கிணைக்கிறது.

ஜிடி 650 பைக்கில் 648சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 47 Hp குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 RPM சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 RPM சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

custom-royal-enfield-continental-gt-650

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.