இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் அவற்றின் தற்போதைய மட்டங்களில்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கைச் சபையானது 2024 மே 27ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.50 சதவீதம் மற்றும் 9.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை 5 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட மட்டத்தில் பேணுகின்ற அதேவேளை பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலை அடைவதற்கு ஆதரவளிக்கும் நோக்கில்

உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் மீதான தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சாத்தியமான இடர்நேர்வுகள் என்பவற்றினைக் கவனமாக மதிப்பீடு செய்ததன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. நடுத்தர கால பணவீக்கத் தோற்றப்பாடானது தற்போதைய கொள்கை வட்டி வீத மட்டத்துடன் தொடர்ந்தும் ஒத்திசைந்து செல்வதுடன் பணவீக்க எதிர்பார்க்கைகள் நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு நாணய நிலைமைகளின் தளர்வு மற்றும் உள்நாட்டுப் பொருளாதார மீட்சி என்பவற்றிற்கு இன்றியமையாததாக விளங்குகின்ற கொள்கை வட்டி வீதங்கள் மற்றும் ஏனைய அடிப்படை வட்டி வீதங்கள் என்பவற்றுடன் இசைந்து செல்லும் விதத்தில் சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்களில் மேலுமொரு குறைப்பிற்கான தேவையை சபை அவதானத்திலெடுத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.