சேலம், கருப்பூர் அருகில் உள்ள கோட்ட கவுண்டம்பட்டி ஈச்சம் காட்டூரை சேர்ந்தவர் காளியப்பன். விவசாயியான இவருக்கு அலமேலு என்ற மனைவியும், சீனிவாசன் என்ற மகனும் உள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட காளியப்பன் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் கோயில் திருவிழாவிற்காக மனைவி அலமேலு சென்றிருக்கிறார். திரும்பி வந்து பார்த்தபோது காதில் ரத்தம் வந்த நிலையில் தலையில் காயத்துடன் கணவர் காளியப்பன் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் இறந்து போனார் இதையடுத்து தடுமாறி கீழே விழுந்ததில், அவர் தலையில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்பட்டது. இதையடுத்து காளியப்பனின் உடல் பிரேத பரிசோதனை அரசு மருத்துவமனையில் நடந்தது. இதில், அவர் கட்டையால் அடித்தும் கழுத்தை இறுக்கியும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக போலீஸார் விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த மகன் சீனிவாசனை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. குடிப்பழக்கம் கொண்ட சீனிவாசனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். வேலைக்கு செல்லாமல் எப்போதும் குடித்துக் கொண்டிருப்பார். இதற்காக தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்வார். இதையடுத்து சொத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு கூறி வந்தார். சொத்தை எழுதிக் கொடுத்தால் அதனை விற்பனை செய்து குடித்து அழித்து விடுவாய் என தந்தை காளியப்பன் கூறியுள்ளார். நேற்று முன்தினமும் இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த காளியப்பன் மகன் சீனிவாசனை கன்னத்தில் அடித்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த சீனிவாசன் அங்கு கிடந்த கட்டையால் தந்தையை அடித்து கழுத்தை நெரித்துள்ளார். அவர் உயிரிழந்த நிலையில் தடுமாறி கீழே விழுந்ததாக கூறி நம்ப வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சீனிவாசனை கைது செய்து போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88