சுங்கத் திணைக்கள வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்யும் போது எவ்வித செல்வாக்கும் இல்லை

 சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளை மிகவும் வினைத்திறனாக செயற்படுத்தும் நோக்கில் தற்போது வெற்றிடங்கள் காணப்படும் சுங்க அதிகாரி மற்றும் சுங்கப் பரிசோதகர் போன்ற பதவிகளுக்காக ஆட்சேர்ப்புச் செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கு எவ்விதத்திலும் செல்வாக்குகள் இடம்பெறவில்லை என்றும், யாரேனும் அவ்வாறு தலையீடுகளை மேற்கொண்டு சுங்கத்திற்குள் நுழைவதற்கு முயற்சிப்பார்களாயின்  அது கருத்திற் கொள்ளப்படாது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.
 
அதன்படி மேற்படிப் பதவிகளுக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்காக நேர்முகப் பரீட்சைகளுக்காக பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த, அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்களின் பெயர்ப் பட்டியல் புள்ளிகளின் வரிசைக்கிணங்க சுங்கத்திணைக்களத்திற்கு முதலில் வழங்கப்படுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இடம்பெறும் நேர்முகப் பரீட்சையில் நேர்முகப் பரீட்சைக் குழு முன்னிலையில் உயரம், நெஞ்சு அளக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டதுடன். பின்னர் சான்றிதழ்கள் பரீட்சிக்கப்படுவதாகவும், சுற்றுநிருபங்ளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள படி விளையாட்டுத் திறமைகளுக்காக அங்கு புள்ளிகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் விபரித்தார்.

அப்பரீட்சைகளில் பெறப்படும் புள்ளிகளை மீண்டும் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பிய பின்னர் அப்புள்ளிகள் மற்றும் எழுத்துப் பரீட்சையில் பெற்ற புள்ளிகளுடன் சேர்த்து அதனை இரண்டாகப் பிரித்துக் கிடைக்கப் பெறும் புள்ளிகளின் படி முன்னுரிமை அடிப்படையில் தயாரிக்கப்படும் பட்டியல் அச்சுங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்படி  நாட்டில் அதிக வருமானம் ஈட்டும் நிறுவனத்திற்குள் நுழைவதற்கு நாட்டில் படித்த இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள முறைக்கு அப்பால் செல்லாது, வெளிப்படைத் தன்மையுடன் முன்மாதிரியான முறையில் இச்செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் இவ்வாறு பொறுப்புடன் அறிவிப்பதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய மேலும் வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.