விமானத்தில் நிர்வாணமாகத் திரிந்த நபர்; புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய விமானம்! – என்ன நடந்தது?

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நகரத்திலிருந்து மெல்போர்னுக்கு நேற்று விர்ஜின் ஆஸ்திரேலியா விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, ஒரு பயணி நிர்வாணமாக விமானத்துக்குள் வலம் வந்திருக்கிறார். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பயணிகள் முகம் சுளிக்க, விமானிகள் பெர்த் விமான நிலையத்துக்குத் தகவலளித்தனர். அதனடிப்படையில், விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் மீண்டும் பெர்த் நகரத்துக்குத் திரும்பியது.

விமானம்

விமானத்திலிருந்த சில பயணிகள் உதவியுடன் அந்த நபர் பிடிக்கப்பட்டு, அவருக்குக் கை விலங்கு போடப்பட்டு, விமானத்தின் இறுதிப் பகுதியில் கட்டப்பட்டிருந்தார். விமானம் தரையிறங்கியதும், காவல்துறையினரிடம் நிர்வாணமாகச் சுற்றிய நபர் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய பயணி ஒருவர், “ஆரம்பத்தில் இது ஒரு தாக்குதலாக இருக்கலாம் என நினைத்தேன். அப்போது பிஸினஸ் வகுப்பில் பயணித்த ஓர் இளைஞர், நிர்வாணமாகச் சுற்றிய நபரின் மீது விழுந்து, அவரை தரையில் தள்ளி சமாளித்தார்.

உடனே சிலர் அவருடன் சேர்ந்து அவருக்குக் கைவிலங்கு போட்டு, விமானத்தின் பின்பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விமான நிறுவன பிரதிநிதி, “எங்கள் பயணிகள் மற்றும் குழுவினரின் பாதுகாப்புதான் எங்கள் முதன்மையான முன்னுரிமை. இந்த எதிர்பாராத சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.