ஒரு ஜனநாயக அரசாங்கமோ அல்லது பாராளுமன்றமோ பொறுப்பற்ற அறிக்கைகளால் நாட்டை குழப்புவதற்கு இடமளிக்காது… – பிரதமர்

ஜனாதிபதி தேர்தல் அரசியலமைப்பின் பிரகாரம் நடைபெறும்.

மக்கள் திரளைப் பார்த்து எந்த அரசியல் முடிவும் எடுக்கப்பட மாட்டாது. குழப்பமடையாது பின்வாங்காது முன்னோக்கிச் செல்வோம்…

நேற்று (2024.05.29) தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையில் மார்ட்டின் விக்கிரமசிங்க ஆவண கலைக்கூடத்தின் விசேட கலையரங்கைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர்-

மாபெரும் எழுத்தாளரும் இலக்கியவாதியுமான மார்ட்டின் விக்கிரமசிங்க அவர்கள் எமது நாட்டின் இலக்கியத்தின் பெருமையை முன்னிறுத்தி இலக்கியம், மொழி, சமூக விஞ்ஞானம் ஆகியவற்றில் புதிய எழுச்சியை ஏற்படுத்தினார். மார்ட்டின் விக்கிரமசிங்க அவர்களின் தொகுப்பில் உள்ள இலக்கியப் படைப்புகளை தேசிய நூலகத்திடம் கையளிக்கும் இந்த வேளையில், நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் கண்களால் பார்த்து மகிழும் வகையில், அந்த செல்வத்தை கட்டியெழுப்பிய நமது சிறந்த இலக்கியவாதியை நாம் நினைவுகூருகிறோம். தேசிய நூலகம் இனிமேல், நாட்டில் உள்ள அனைவருக்கும் பயன்படும் வகையில், இந்த இலக்கயச் சொத்தை வழங்கும் பணியை மேற்கொள்ளும்.

நமது நாட்டிற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்த மார்ட்டின் விக்கிரமசிங்க அவர்களின் குடும்பத்தினர் இதுவரைப் பாதுகாத்து இன்று அதனை அடுத்த தலைமுறையின் நன்மைக்காக தேசத்திடம் ஒப்படைப்பது மிகவும் முக்கியமானது என்பதோடு, அதற்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த பொக்கிஷத்தை பாதுகாக்க இந்த குடும்பம் செய்த பணியை விட அதிகமாக இங்கு செய்யப்படும் என்று நம்புகிறோம். மார்ட்டின் விக்கிரமசிங்க தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பற்ற இலக்கியவாதி. உலகின் இலக்கிய மையங்களாக திகழும் நாடுகளில் அவருக்கு அபரிமிதமான மரியாதை உண்டு. இன்று இந்த நூலகம் அவ்வாறு இணைந்துகொள்வதானது எமது நாட்டிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தனித்துவமானது.

இங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் –

தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் படி முன்கூட்டியே அழைப்புவிடுக்கவும் முடியாது. பிந்தி அழைக்கவும் முடியாது. இது அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டபடி தேர்தலை நடத்தும்.

பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது, இல்லையா?

இதற்கு முன்னரும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஆணை ஜனாதிபதிகளுக்கு இருந்தது. தமது சொந்த அரசாங்கங்களை வைத்திருந்த ஜனாதிபதிகள் வெற்றி பெறலாம் என நினைத்து அரசாங்கத்தை கலைத்து தோற்றுப்போன சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். கட்சியும் எதிர் கட்சிக்கு போக வேண்டியதாயிற்று. அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. புதிய பாராளுமன்றம் ஒன்று உருவாகி இரண்டரை வருடங்களின் பின்னர் அதனை கலைப்பதற்கான சந்தர்ப்பம் ஜனாதிபதிக்கு உள்ளது.

சவால்களுக்கு மத்தியில் எமது பாராளுமன்றம் மிகவும் பொறுமையாக பயணிக்கின்றது. கருத்து வேறுபாடுகளும் உண்டு. அது இல்லாமல் இல்லை. பாராளுமன்றத்தினால் தொடர்ந்தும் இயங்க முடியாவிட்டால் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க முடியும். பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ஜனாதிபதிக்கு கலைக்க முடியும். இல்லையெனில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் பாராளுமன்றத்தின் காலம் முடிவடையும்.

இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயகொடி, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் பேராசிரியர் நந்த தர்மரத்ன, தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. சுனில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, பேராசிரியர் ஜே.பி.திஸாநாயக்க, பேராசிரியர் ஜயதேவ உயங்கொட, பேராசிரியர் பத்மலால் என். மானகே மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.