டி20 உலகக் கோப்பை தொடரில் இல்லாத ஐபிஎல் விதிமுறைகள்..!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா முடிவடைந்திருக்கும் நிலையில், அடுத்ததாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஜூன் 1 ஆம் தேதி டி20 உலக கோப்பை போட்டி தொடங்கினாலும், இந்திய அணி ஜூன் 5 ஆம் தேதி தான் முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் இருந்த சில விதிமுறைகள் எல்லாம் டி20 உலக கோப்பையில் இருக்காது. அதனால் வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும். எந்ததெந்த விதிமுறைகள் இருக்காது என்பதை பார்க்கலாம்.

இம்பாக்ட் பிளேயர் விதி

ஐபிஎல் தொடர்களில் புதிதாக இம்பாக்ட் பிளேயர் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த விதிமுறையின்படி அண்மையில் முடிவடைந்த டி20 ஐபிஎல் தொடரும் நிறைவடைந்தது. இம்பாக்ட் பிளேயர் விதியின்படி, டாஸ் நேரத்தில் பிளேயிங் லெவன் அறிவிக்கும் போது, கேப்டன் மேலும் ஐந்து வீரர்களைக் குறிப்பிட வேண்டும். இந்த 5 வீரர்களில் ஒருவர் இம்பாக்ட் வீரராகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு போட்டியின் நடுவில், எந்த அணியின் கேப்டனும் பிளேயிங் லெவனில் இருந்து ஒரு வீரரை நீக்கிவிட்டு, இம்பாக்ட் பிளேராக கொடுக்கப்பட்ட பெயர்களில் இருந்து ஒரு வீரரைத் தேர்ந்தெடுக்கலாம். ஐபிஎல் 2024ல் இந்த விதியை அனைத்து அணிகளும் பயன்படுத்திக் கொண்டன. இந்த விதியால் அனைத்து அணிகளும் அதிக ரன்களை குவித்தன. ஆனால், எதிர்வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்த விதி இருக்காது.

நோ பால்ஸ், வைட் பால்களுக்கு டிஆர்எஸ் இல்லை

ஐபிஎல்லில், போட்டியின் போது வீரர்கள் வைட் பால் மற்றும் நோ பால்ஸூக்கு டிஆர்எஸ் எடுக்கும் ஆப்சன் இருந்தது. ஆனால் டி20 உலகக் கோப்பையில் இந்த விதிமுறை இல்லை. அதனால், வீரர்கள் வைட் மற்றும் நோ பந்திற்கு டிஆர்எஸ் எடுக்க முடியாது.

ஒரே ஒரு பவுன்சர் மட்டும் பவுலர்கள் வீசலாம்

ஐபிஎல் போட்டிகளில் எந்த ஒரு பந்து வீச்சாளரும் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்களை வீச முடியும். ஆனால் டி20 உலகக் கோப்பையில் அப்படி வீச முடியாது. டி20 உலகக் கோப்பை போட்டிகளில், ஒரு பவுலர் ஒரு ஓவரில் ஒரு பவுன்சர் மட்டுமே வீச முடியும்.

டைம் அவுட் இருக்காது

ஐபிஎல்லில், ஒரு இன்னிங்ஸில் தலா 2.30 நிமிடங்கள் கொண்ட இரண்டு இடைவெளிகள் கொடுக்கப்படும். அதாவது, ஒரு போட்டியில் நான்கு முறை இந்த டைம் அவுட் இருக்கும். இந்த நேரத்தில் இரு அணிகளும் தங்களின் வியூகங்களை சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். ஆனால், அந்த டைம் அவுட்டெல்லாம் டி20 உலக கோப்பையில் இருக்காது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.