அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில் – கொழுந்துமாமலை – திருநெல்வேலி தல சிறப்பு: கோயிலின் வடகிழக்கு மூலையில் சிறிய கிணறு உள்ளது. இதை பாலூற்று என்று அழைப்பர். மழைக்காலத்தில் கிணற்றுநீர் மட்டத்திற்கு மேல் பொங்கி வழியும். இது மிகவும் சுவையாகவும், கலங்கிய நிலையில் தேங்காய் தண்ணீரைப் போலவும் இருக்கும். இதை இளநீர்க் கிணறு என்றும் அழைக்கிறார்கள். பொது தகவல்: இங்கு முதற்கடவுள் விநாயகர் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். கோயிலின் தென்கிழக்கில் காவல் தெய்வமாக இடும்பன் சந்நிதி உள்ளது. அதற்கு […]