இந்திய சந்தையில் போர்ஷே நிறுவனத்தின் 911 Carrera மற்றும் ஹைபிரிட் பவர்டிரையின் பெற்ற 911 Carrera 4 GTS என இரண்டு மாடல்களும் முறையே ரூ.1.99 கோடி மற்றும் ரூ.2.75 கோடியிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் இரண்டு 911 காரேரா மாடல்களுக்கும் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், டெலிவரி நடப்பு ஆண்டின் இறுதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
3.0 லிட்டர் ட்வின் டர்போ பாக்ஸர் என்ஜினை பெறுகின்ற போர்ஷே 911 Carrera மாடல் அதிகபட்சமாக 394hp பவர் மற்றும் 450Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜினில் 8 வேக PDK ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்று RWD கொண்டதாக கிடைக்கின்றது.
அடுத்து 911 Carrera 4 GTS காரில் உள்ள புதிய ஹைபிரிட் என்ஜின் பெற்றதாகும். எலக்ட்ரிக் டர்போசார்ஜருடன் கூடிய 3.6-லிட்டர் ஆறு சிலிண்டர் என்ஜின் வெளிப்படுத்துகின்ற ஒட்டுமொத்த குதிரைசக்தி 541hp மற்றும் 610Nm வரை டார்க்கை வெளியிடுகிறது. இந்த காரில் 8-ஸ்பீடு PDK ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இரு மாடல்களும் சிறப்பான ஸ்போர்ட்டிவ் பேக்கேஜ் பெற்றதாகவும், நவீனத்துவமான வசதிகளை பெற்றதாகவும் விளங்குகின்றன.