பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தீகவாபிய புனரமைப்பு திட்டத்தை ஆய்வு

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ எம்எஸ்சி ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி ஆகியோர் 2024 மே 30 ஆம் திகதி ‘தீகவாப்பிய’ மற்றும் ‘நீலகிரிய’ புனரமைப்புத் திட்டத்தை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் விஜயத்தை மேற்கொண்டனர்.

அதிதிகள் விகாரையின் பொறுப்பாளரான வண. மகாஓய சோபித தேரர் அவர்களிடம் பிக்குகளின் நலன் மற்றும் புனரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தனர். அதை தொடர்ந்து, புனித சந்நிதி, யாத்ரீகர்கள் ஓய்வு மண்டபம், பிக்குகள் (சங்கவாசம்) தங்குமிடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தனர். நிர்மாணப் பணிகள் முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் படையினரால் மேற்கொள்ளப்படுகின்றன. அப்பகுதியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வரும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடனும் அவர்கள் கலந்துரையாடினர்.

அம்பாறையிலிருந்து தமது பயணத்தின் போது, பொத்துவில் செங்கமுவவில் உள்ள நீலகிரி பாகொடை விகாரைக்கு விஜயம் செய்த அதிதிகள் இலங்கை விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விகாரையின் நிர்மாணப் பணிகள் குறித்தும் ஆராய்ந்தனர்.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ் ஏ குலதுங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ பீஎஸ்சீ, தென்கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் எம்டிஎஸ் கருணாதுங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் விஜயத்தில் பங்குபற்றினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.