ஆண்ட்ராய்ட் மொபைல்களில் வரும் சூப்பரான 7 அப்டேட்கள்… கூகுள் அறிவிப்பு

Google Upcoming Updates On Android: ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஸ்மார்ட்போன் என்றாலே ஆண்ட்ராய்ட் மூலம் இயங்கும் மொபைல்தான் அதிகமாக உள்ளன. ஆப்பிள் ஐபோனும் குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், தற்போது ஆண்ட்ராய்ட் மொபைல் பயனர்களுக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. 

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கான புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன் மூலம், அனைத்து ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கும் 7 புதிய அம்சங்களை கூகுள் அறிவித்துள்ளது. அதாவது, ஐபோன் மொபைலிலேயே வராத சில அம்சங்கள் தற்போது ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கு கிடைக்கப்போகிறது. அதுமட்டுமின்றி, ஆண்ட்ராய்ட் நிறுவனங்கள் மூலம் அனைத்து ஸ்மார்ட் வீட்டு உபயோக பொருள்களையும் இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 7 அம்சங்களை இங்கு விரிவாக காணலாம்.

Instant Hotspot

இந்த அம்சம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த அம்சத்தின் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு டேப்லெட்கள் அல்லது Chrome Book லேப்டாப்களை தங்கள் மொபைலின் ஹாட்ஸ்பாட்டுடன் ஒரே கிளிக்கில் இணைக்கலாம்.

இப்படி சாதனங்களை இணைப்பதன் மூலம் பல நன்மைகள் உள்ளன. உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் மொபைலில் Google Meet மீட்டிங்கின் போது இடையில் உங்களின் இணைக்கப்பட்ட வேறு சாதனத்துடன் இணைக்க வேண்டும் என்றால், Cast ஐகானை கிளிக் செய்தால் போதும்.

Digital Car Key

டிஜிட்டல் கார் திறவுகோலுக்கான (Digital Car Key) ஆதரவை இன்னும் அதிக வாகனங்களுக்கு கூகுள் நீட்டிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட MINI வகைகளுக்கு கூகுள் இந்த அம்சத்தை வழங்கியுள்ளது, மேலும் இது தேர்ந்தெடுக்கப்பட்ட Mercedes-Benz மற்றும் Polestar வாகனங்களை விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பயனர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன்களை பயன்படுத்தி தங்கள் கார்களைப் பூட்டவும், திறக்கவும், ஸ்டார்ட் செய்யவும் அனுமதிக்கிறது.

New Interesting Emojis

ஆண்ட்ராய்டு போன்களில் காணப்படும் எமோஜி என்பது பலராலும் ரசிகப்படும், உபயோகிக்கப்படும் ஒன்றாகும். அந்த வகையில் தற்போது கூகுள் மேலும் பல எமோஜி கிச்சன் காம்பினேஷனை கொண்டு வருகிறது. உங்களுக்கு பிடித்த எமோஜியை ரீமிக்ஸ் செய்து, அவற்றை Gboard (Google Keyboard) வழியாக ஸ்டிக்கர்களாக உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். 

Wallet in Smartwatch

Wear OS மூலம் இயங்கும் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு Google Wallet செயலியை கூகுள் கொண்டு வருகிறது. இந்த அம்சம் அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் உள்ள பயனர்களுக்கு தற்போது அறிமுகப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச் மூலம் Google Wallet செயலியில் PayPal மூலம் நீங்கள் பணம் செலுத்தலாம்.

Smart Devices Control

Wear OS மூலம் இயங்கும் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு Google Home Favourites அம்சத்தை கூகுள் கொண்டு வருகிறது. இதன்மூலம், ஸ்மார்ட்வாட்ச்களைப் பயன்படுத்தி வீட்டில் அதிகம் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம், இயக்கலாம்.

Messages

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வரும் மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி விரைவில் வருகிறது. Google Messages போன்ற மெசேஜிங் செயலியில் நீங்கள் அனுப்பும் மெசேஜ்களை எடிட் செய்ய இயலும். அனுப்பிய எந்த மெசேஜையும் 15 நிமிடங்களுக்குள் திருத்திக்கொள்ளலாம்.

Google Widget

Google Home Favourite வடிவமைப்பும் புதுப்பொழிவை பெற இருக்கிறது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன் பயனர்கள், தாங்கள் அதிகம் பயன்படுத்தும் ஸ்மார்ட் சாதனங்களை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும், இப்போது அந்த விட்ஜெட்டை தங்கள் மொபைலின் முகப்புத் திரையில் சேர்க்கலாம்.

மேலும் படிக்க | Samsung Galaxy F55 : செல்பி கேமராவில் அமர்களப்படுத்தும் சாம்சங்க் – யூ டியூபர்களுக்கு ஏற்ற மொபைல்
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.