நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலும், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள்களும் நடந்து முடிந்திருக்கின்றன. 2019-ம் ஆண்டு நடந்த ஒடிசா சட்டமன்றத் தேர்தலில், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) 147 இடங்களில் 113 இடங்களில் வெற்றி பெற்று, நவீன் பட்நாயக் தலைமையில் ஐந்தாவது முறையாக ஆட்சி அமைத்தது.
175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில், 2019-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர்.சி கட்சி 151 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி அமைத்தது.
அதேபோல 32 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சிக்கிமில், 2019-ம் ஆண்டு, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) 17 இடங்களை வென்றும், 60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், 41 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க-வும் ஆட்சியமைத்தன.
இந்த நிலையில், இந்த நான்கு மாநிலங்களில் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு ஜூன் 2-ம் தேதி அதாவது நாளையும், ஒடிசா, ஆந்திரா மாநிலங்களுக்கு ஜூன் 4-ம் தேதியும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்த நிலையில், தேசிய ஊடகங்கள் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் நடந்து முடிந்திருக்கும் சட்டமன்றத் தேர்தலில்… எந்தக் கட்சி வெற்றிபெறும் என்பது குறித்த `வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு’ முடிவுகளை வெளியிட்டுவருகின்றன.
தேசிய ஊடகங்கள் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் நடந்து முடிந்திருக்கும் சட்டமன்றத் தேர்தலில்… எந்தக் கட்சி வெற்றிபெறும் என்பது குறித்த `வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு’ முடிவுகளை வெளியிட்டுவருகின்றன.
அதன் விவரங்கள் பின்வருமாறு:-
ABC – C Voter
YSRCP – 97 – 108
TDP – 67 – 78
OTHERS – 0
AARAA
YSRCP – 94 – 104
TDP – 71 – 81
OTHERS – 0
RISE
YSRCP – 115
TDP – 58
OTHERS – 1
NDTV India – Jan Ki Baat
YSRCP – 45-60
TDP+ – 111-135
INC – 0
ஒடிசா சட்டமன்றத் தேர்தல் குறித்த, Exit Polls முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை… வெளியான பின்னர், இங்கு உடனடியாகப் பதிவிடப்படும்!