மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் விற்பனையை அதிகரிப்பதற்காக சிறிய கார்களில் கூடுதலாக சில வசதிகளை சேர்க்கப்பட்ட ட்ரீம் சீரியஸ் எடிசனை விற்பனைக்கு வெளியிட உள்ளது.
மாருதி சுசூகி ‘Dream Series’
ட்ரீம் சீரியஸ் எடிசன் வெளியாக உள்ள ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ மற்றும் செலிரியோ ஆகிய மாடல்களுக்கு முன்பதிவு இன்று முதல் துவங்கப்பட்டுள்ளதால் ஜூன் 4-ஆம் தேதி விற்பனைக்கு கிடைக்க உள்ளது. குறிப்பாக இந்த மூன்று மாடல்களும் ரூ.4.99 லட்சம் விலையில் துவங்கலாம்.
அடிப்படையான மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ள வேரியண்டுகளில் மட்டும் வரவுள்ள இந்த சிறப்பு ட்ரீம் சீரிஸ் பதிப்பில் ஸ்மார்ட்போன் இணைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சவுண்ட் சிஸ்டம் போன்ற கூடுதல் அம்சங்களை கொண்டிருக்கலாம்.
ஆல்டோ கே10, செலிரியோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ என மூன்று கார்களிலும் 1.0 லிட்டர் K10C பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 49 kW (66.621 PS) @ 5500 rpm மற்றும் 89 Nm @ 3500 rpm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கபட்டுள்ளது.
சமீபத்தில் மாருதி சுசூகியின் AGS எனப்படுகின்ற ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட வேரியண்டுகளின் விலையை ரூ.5,000 வரை குறைத்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் வெளியான 2024 மாருதி ஸ்விஃப்ட் மாடலும் உள்ளது.
குறிப்பாக மாருதியின் சிறிய ரக கார்களின் விற்பனை எண்ணிக்கை குறித்து வெளியிட்ட அறிக்கையில் மே 2024ல் 78,108 கார்களை டெலிவரி வழங்கியுள்ளதாகவும், இதே காலகட்டத்துடன் முந்தைய மே 2023 உடன் ஒப்பிடுகையில் 6.6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.