இந்திய டெலிகாம் துறையில் ஜியோ ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்குடன் பல அதிரடி ஆஃபர்களையும், பிளான்களையும் அறிவிக்கும் ஜியோ, மார்கெட்டில் ஏர்டெல், வோடாஃபோன் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அண்மைக்காலமாக அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக இருக்கும் ஜியோ, அன்லிமிடெட் டேட்டா திட்டங்களையும் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் இந்த பிளான்களை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. அந்தவகையில் 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் அன்லிமிடெட் டேட்டா திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இந்த திட்டங்கள் ஒருமாத வேலிடிட்டியில் இருக்கின்றன.
ஜியோவின் அன்லிமிடேட் டேட்டா பிளான்
நீங்கள் நோ-டேட்டா வரம்பு திட்டத்தை தேர்வு செய்ய விரும்பும் ஜியோ சந்தாதாரராக இருந்தால், அதற்கு நீங்கள் ரூ.296 செலுத்த வேண்டும். இந்த ரீசார்ஜ் திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்த பிறகு, சந்தாதாரர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இது தவிர தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம். ஜியோவின் இந்த திட்டமானது தினசரி டேட்டாவிற்கு பதிலாக மொத்தம் 25ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த தரவு முழு 30 நாட்களுக்கு கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் விரும்பினால், எல்லா தரவையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம் அல்லது சேமிக்கலாம். இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், தினசரி டேட்டா தீர்ந்துவிடும் என்ற பதற்றம் இருக்காது.
வரம்பற்ற 5G டேட்டாவையும் அனுபவிக்கவும்
5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோ சந்தாதாரர்கள், 5ஜி வசதியைப் பெற்றுள்ளவர்கள், ரூ.239 மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால், கூடுதல் கட்டணம் ஏதுமின்றி அன்லிமிடெட் 5ஜி டேட்டாவின் பலன் வழங்கப்படுகிறது. 296 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் கூட, தகுதியான பயனர்களுக்கு டேட்டா வரம்பு இல்லை, மேலும் அவர்கள் அன்லிமிடேட் 5G டேட்டாவைப் பெறுவார்கள்.
ஜியோவின் ஒரு வருட டேட்டா பிளான்
அதேநேரத்தில் நீங்கள் ஜியோவில் நீண்ட கால வேலிடிட்டி இருக்கும் பிளானை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், ஒரு வருட பிளான்களும் இருக்கின்றன. ரூ.3,227 ரீசார்ஜ் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேடாவுடன் ஒரு வருடம் 730ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதவிர அமேசான் பிரைம் வீடியோ சப்ஸ்கிரிப்சனும் உண்டு. ஜியோ செயலிகளுக்கான அணுகலும் கிடைக்கும். இன்னும் கூடுதல் டேட்டா வேண்டும் என எதிர்பார்த்தால், ரூ.3,333 ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுக்கவும். இதில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கிறது. வருடத்திற்கு 912.5ஜிபி கிடைக்கும். வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும். தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாகும். இதில் ஜியோ டிவியின் மூலம் Fancode ஓடிடியை நீங்கள் ஒரு வருட காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் சப்ஸ்கிரிப்சனும் கிடைக்கும்.